மோர்குளங்கரா தேவி கோயில்
மோர்குளங்கரா தேவி கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் பகவதி ஆவார். இந்தக்கோயிலின் சிறப்பம்சமாக இங்குள்ள 6 அடிக்கும் மேல் உயரமுள்ள மோர்குளங்கரா தேவி ஆகும். தாரிகா என்ற அசுரனைக் கொன்ற பிறகு அவ்விடத்தில் தேவியை வைத்ததாகநம்பப்படுகிறது.
சிறப்பு
தொகுஇக்கோயில் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். கோயில் மூலவரின் கருவறைக்கு முன்னால் தேவி சிலையை நோக்கி உள்ள உயரமான ஆலமரம் மிகவும் கவர்ச்சிகரமானதாகும். மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்ற மீன பரணி திருவிழா இங்கு முக்கிய திருவிழாவாகும். [1] மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்வர். செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகள் பக்தர்கள் வரும் முக்கிய நாட்களாகும். மோர்குளங்கரா தேவி கோவிலுக்கு பக்தர்கள் குவியும் முக்கிய நாட்கள் ஆகும்.
நிர்வாகம்
தொகுஇக்கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. ,
இருப்பிடம்
தொகுமோர்குளங்கரா தேவி கோவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாசேரி வட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், சங்கனாசேரி முனிசிபல் சந்திப்பிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்
தொகுஇக்கோயில் தரிசனத்திற்காக காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகுமோர்குளங்கரா தேவி கோவில் பற்றிய நாட்டுப்புற கதைகள் www.mustseeindia.com