மோர்மொன் நூல்

மோர்மொன் நூல் (Book of Mormon) என்ற புனித நூல் பின்னாள் புனிதர்களால் விவிலியத்துடன் இணைந்து கடவுளின் வாக்காக நம்பப்படுவதாகும். இதன் ஆங்கிலப் பதிப்பு முதன்முதலில் மார்ச்சு 1830இல் ஜோசஃப் ஸ்மித், ஜூனியர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் இறைவாக்கினர் போல தம்மை அறிவித்துக் கொண்ட இவர் தமக்கு ஓர் தேவதூதர் கொடுத்த தங்கத் தகடுகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்ததாகக் கூறினார். இந்த தங்கத்தகடுகளில் முதன்முதலாக எழுதப்பட்டிருந்த மொழி " யூதர்களின் கற்றலையும் எகிப்தியர்களின் மொழியும்" கொண்டு உருவானதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோர்மொன் நூல்

மோர்மொன் என்பவரால் பதியப்பட்ட நெபைட்டுக்கள், இலாமனைட்டுக்கள் என்ற இரு மக்கள் குழுக்களைப் பற்றிய கதையின் சுருக்கமே மோர்மொன் நூலில் இடம் பெற்றுள்ளது. இவர்களது மூதாதையர்கள் தங்கள் தந்தை லெகியுடன் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே யெரூசலத்தை விட்டு நீங்கியதாகவும் மாபெரும் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தில் குடியேறியதாகவும் குறிப்பிடுகிறது. இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை, நகரங்கள், போர்கள், அரசு அமைப்புக்கள், ஆன்மிக புரிதல்கள் மற்றும் சமய நம்பிக்கைகளை இந்நூல் விவரிக்கிறது. இதன் முதன்மை குறிக்கோளாக இயேசு கிறிஸ்து குறித்தான கற்கையைப் பரப்புவதாகும். இந்த மக்களிடையே இயசு கிறிஸ்து வருகை புரிந்து அதிசயங்கள் நிகழ்த்தி சரியான வாழும் முறையை வழிகாட்டியதே இந்த நூலின் மையக் கருத்தாகும்.[1][2][3]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Book of Mormon: An Account Written by the Hand of Mormon, Upon Plates Taken from the Plates of Nephi (1830 edition). E. B. Grandin. 1830.
  2. Archives, Church News (17 August 2013). "'Keystone of our religion'". Church News. https://www.thechurchnews.com/2013/8/17/23224107/keystone-of-our-religion. 
  3. "The Book of Mormon is the Keystone of Our Religion", Preach My Gospel, பார்க்கப்பட்ட நாள் 31 March 2024
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்மொன்_நூல்&oldid=4102491" இலிருந்து மீள்விக்கப்பட்டது