ம. இரா. சம்புநாதன்

மணக்கால் இராமசாமி சம்புநாதன் என்னும் எம். ஆர். ஜம்புநாதன் (ஆகத்து 23, 1896 - 1974) ஒரு பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், இந்தி ஆகிய மொழிகளை அறிந்தவர். வடமொழி மறைகள் நான்கையும் தமிழில் மொழிபெயர்த்தவர். மும்பையில் வாழும் தமிழர்களுக்காக அங்கு நகராட்சி தமிழ் தொடக்கப் பள்ளியைத் தொடங்கக் காரணமாக இருந்தவர்.[1] இவர் 16 தமிழ் நூல்களையும் 3 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.

பிறப்பு

தொகு

ம. இரா. சம்புநாதன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணக்கால் என்னும் ஊரில் வாழ்ந்த இராமசுவாமி கவனகர் – இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாக 1896 – ஆகத்து – 23 ஆம் நாள் பிறந்தார். சாந்தி என்பவரை மணந்தார்.[1]

படைப்புகள்

தொகு

ம. இரா. சம்புநாதன் இளமையிலேயே மும்பை நகரில் குடியேறிவிட்டார். இதனால் அவருக்கு தயானந்த சரசுவதி தொடங்கிய ஆரிய சமாசம்|ஆரிய சமாசத்தோடு தொடர்பு ஏற்பட்டது. எனவே வடமொழியில் உள்ள நான்மறைகளும் சாதிகளைக் கடந்து அனைவருக்கும் படிக்கக் கிடைக்க வேண்டும் என விழைந்தார். எனவே அவற்றையும் அவற்றோடு தொடர்புடைய வடமொழிகள் நூல்களையும் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். இவர் தமிழில் 16 நூல்களையும், ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் படைத்திருக்கிறார். அவற்றை ஜம்புநாத புஸ்தகசாலை என்னும் தன்னுடைய சொந்த பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார். அவை வருமாறு:[2]

வ. எண் ஆண்டு நூலின் பெயர் பொருள் குறிப்பு
01 1925 ஸ்ரீசுவாமி தயானந்த சரஸ்வதியாரின் சத்தியார்த்தப் பிரகாசம்:உண்மைநெறி விளக்கம். முதற்பாகம் தத்துவம் ஆர்ய சமாஜம் தொடர்பான விளக்கங்கள்-ஆரிய புத்தகாலையம்
02 1926 வைதிக ஜயபேரிகை 39 பக்கங்கள் - ஆரிய புத்தகாலையம்
03 1928 திருமூர்த்தி உண்மை அல்லது தேவர்களின் இரகசியம் 111 பக்கங்கள்
04 1928 சீனவேதம், அல்லது, சகத்தின் சூட்சமம் தத்துவம் சூடன் கோ, மதராஸ் - 107 பக்கங்கள்
05 1931 மாஜினியின் சரித்திரமும் மனிதர்களின் கடமைகளும் வ்ரலாறு சூடன் கோ, மதராஸ் - 292 பக்கங்கள்
06 1932 கடோபநிஷதம், அல்லது, யமன் பேசுகிறார்: நாகரம், தமிழ் சுலோகமும், இனிய உரையும் இந்துமதவியல் ஜம்புநாதன் புஸ்தகசாலை
07 1934 வேத காண்டிகை 104 பக்கங்கள்
08 ஸாம-வேதம் : தமிழ் மொழி பெயர்ப்பு 288 பக்கங்கள்
09 1938 யஜுர் வேதம் : கிருஷ்ண சுக்கில மந்திரங்களின் பரிபூரணத் தமிழ்மொழி பெயர்ப்பு இந்துமதவியல் ஜம்புநாதன் புஸ்தகசாலை -582 பக்கங்கள்
10 1940 அதர்வ-வேதம் : அதர்வவேத சம்ஹிதையின் பரிபூரணத் தமிழ் மொழிபெயர்ப்பு இந்துமதவியல் தஞ்சாவூர்: சாமிநாதத்தம்பிரான் சுவாமிகள் என்டோமென்ட், 744 பக்கங்கள்
11 1977 இருக்கு வேதம் - முதற்றொகுதி முப்பது ஆண்டுகள் உழைப்பில் உருவான் இந்நூலை சம்புநாதன் மறைவிற்குப் பின்னர் அவர் மனைவி சாந்தி சம்புநாதன் வெளியிட்டார். 899 பக்கங்கள்
12 உபநிசதக் கதைகள்
13 சதபத பிராமணம் யசூர் வேத சதபத கதைகள்
14 யோகாசனம்
15 திரிமூர்த்தி உண்மை
16 சிரத்தானந்தர் சரித்திரம்
17 2004 யஜுர்வேதக் கதைகள் யஜுர்வேதக் கதைகள் / தமிழ் சத்தியார்த்த பிரகாசம், உபநிஷதக் கதைகள், யோகாசனம், சீன வேதம், திரிமூர்த்தி உண்மை, சிரத்தானந்தர்சரித்திரம், மாஜினி சரித்திரம், கடோப நிஷதம் முதலிய நூல்களின் ஆசிரியர் எம். ஆர். ஜம்புநாதன் எழுதியது. - தஞ்சாவூர் : கலாசம்ரக்ஷ்ண சங்கம், 2004. - 80 பக்கங்கள்
18 2004 ரிக் வேதம் : மூன்று தொகுதிகள் அலைகள் வெளியீட்டகம், சென்னை. பதிப்பாசிரியர் - வீ. அரசு

தமிழ்ப் பள்ளி

தொகு

நெடுங்காலம் மும்பையில் வாழ்ந்த ம. இரா. சம்புநாதன், அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழ்த் தொடக்கப் பள்ளியை மும்பை நகராட்சி தொடங்குவதற்குக் காரணமாக இருந்தார்.

மறைவு

தொகு

ம. இரா. சம்புநாதன் 1974 ஆம் ஆண்டு, தனது எழுபத்தியெட்டாம் அகவையில் மும்பை நகரில் காலமானார்.[1]

சான்றடைவு

தொகு
  1. 1.0 1.1 1.2 வேதம் தமிழ் செய்த நாதன், சி. சேதுபதி, தினமணி
  2. ரோசா முத்தையா நூலக பட்டியிலில் இருந்து திரட்டப்பட்டவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._இரா._சம்புநாதன்&oldid=2744315" இலிருந்து மீள்விக்கப்பட்டது