ம. க. அ. அந்தனிசில்
ம. க. அ. அந்தனிசில் (இறப்பு: சூலை 9, 2005) ஈழத்து முதுபெரும் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், வரலாற்றாய்வாளரும் ஆவார். தீப்பொறி, "ஒரு தீப்பொறி” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான கருத்துக்களை தமது பத்திரிகைகளில் எழுதினார். 1967 இல் "தீப்பொறி", 1970 இல் "பல்கலை", 1972 இல் "ஒரு தீப்பொறி" ஆகிய மூன்று பத்திரிகைகளை அவ்வப்போதிருந்த தமது அரசியற்கோட்பாடுகளுக்கேற்ற வகையில் நடத்தினார். இவரது அடுக்குமொழித் தலைப்புக்கள் நீண்ட காலம் பொதுமக்களால் பேசப்பட்டுவந்தன.
இவரது தீப்பொறி பத்திரிகை இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டதை அடுத்து, “ஒரு தீப்பொறி” என்ற பெயரில் தனது பத்திரிகையை வெளியிட்டு வந்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக யாழ்ப்பாண நீதி மன்றம் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. இவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரரும் ஆவார்.
தமது இறுதிக் காலத்தில் தமிழின் தொன்மையையும் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்தும் கருத்துச் செறிவுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில் தொடராக எழுதி வந்தார். விவிலியக் கதைகளை தமிழில் எழுதினார். சொல்லேருழவர் என இவர் அழைக்கப்பட்டார்.
மறைவு
தொகுதமது இறுதிக் காலத்தில் கண்பார்வைக் கோளாறையும், நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கும் உள்ளான நிலையில், அந்தனிசில் மட்டக்களப்பில் 2005, சூலை 9 இல் காலமானார்.