யகாங்கிரி மகால்
யகாங்கிரி மகால் (Jahangiri Mahal; இந்தி: जहाँगीरी महल, உருது: جہانگیری محل) என்பது இந்தியாவின் ஆக்ரா கோட்டைக்குள் இருக்கும் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு கட்டிடமாகும். அரசகுலப் பெண்களின் இருப்பிடமான செனான் எனப்படும் இம்மகால் ஒரு முதன்மை அந்தப்புரமாக விளங்கியது. இங்கு அக்பரின் இரசபுத்திர மனைவிகள் குடியிருந்தனர். இம்மகால் இந்து மதம் மற்றும் மத்திய ஆசியக் கட்டடக்கலையின் ஒரு கலவையாகும்.[1][2]
வரலாறு
தொகுயகாங்கிரி மகால் அரண்மனை பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது ஆகும். அக்பரின் ஆட்சிக்காலம் பற்றி அறிய உதவும் பழமையான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும். யகாங்கிரி மகால் போன்ற ஒரு சிறந்த அரண்மனை தனது தந்தை அக்பரால் எழுப்பப்பட்டது என்றாலும் அவர் அதன் கட்டுமானம் குறித்து எந்தவிதமான உரிமையும் கோரவில்லை என்று தன்னுடைய நினைவுகளில் யகாங்கிர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.[3] Mughal empress Nur Jahan used this as her residence. மகாராணி நூர்சகான் இந்த அரண்மனையில் வசித்தார்.
இந்த அரண்மனையில் அவுசி யகாங்கிரி எனப்படும் ஒரு பெரிய கற்கிண்ணம் இருந்தது. இக்கற்கிண்ணம் ஒரேயொரு கல்லில் இருந்து குடைந்து செதுக்கப்பட்ட சிறப்பைப் பெற்றதாகும். மணக்கும் பன்னீர் நிரப்பப்பட்ட கொள்கலனாக இக்கற்கிண்ணம் பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
- ↑ http://www.thehindu.com/arts/history-and-culture/article697168.ece
- ↑ http://indiatourism.ws/uttar_pradesh/agra/agra_fort/14.php