யசோமதி சந்திரகாந்த் தாக்கூர்
யசோமதி தாக்கூர் என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2020-2022 மகாராட்டிராவின் அமராவதி மாவட்ட அரசாங்கத்தின் பாதுகாவலர் அமைச்சராகவும், 14ஆவது மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் தியோசா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
கர்நாடக மாநில காங்கிரசு கட்சி விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரசு செயலாளராக யசோமதி தாக்கூர் நியமிக்கப்பட்டார். இவர் மகாராட்டிராவின் அமராவதிக்கு அகில இந்திய காங்கிரசு குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1]
தியோசா சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினராக 2009ஆம் ஆண்டிலிருந்து யசோமதி தாக்கூர் தொடர்ந்து மூன்று வெற்றி பெற்று பணியாற்றிவருகின்றார். இவருக்கு முன், இவரது தந்தை ஒரே இத்தொகுதியில் பலமுறை பிரதிநிதித்தியுள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாசு அகாடி அரசில் அமைச்சராகப் பதவியேற்றார். அமராவதி மாவட்டத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.
கிரிமினல் வழக்கு(கள்)
தொகு2012 தாக்குதல் வழக்கு
இந்த வழக்கில் அமராவதியில் உள்ள நீதிமன்றம் அக்டோபர் 15ஆம் தேதி மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் தாக்கூர் மற்றும் அவரது ஓட்டுநர் உட்பட 3 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இவர்களுக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதித்தது.[1]
சட்டமன்ற தளிகா தலைவர் 2019
தொகுநாக்பூர் விதர்பாவில் நடைபெற்ற மகாராட்டிரச் சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு 16 திசம்பர் 2019 அன்று நானா படோலே அவர்களால் சட்டப்பேரவை தளிகா தலைவராக நியமிக்கப்பட்டார்.