யதாத்ரி புவனகிரி மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்
யதாத்ரி புவனகிரி மாவட்டம் (Yadadri Bhuvanagiri district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பொங்கிர் நகரம் ஆகும்.[2] நல்கொண்டா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் யதாத்ரி-புவனகிரி மாவட்டம் நிறுவப்பட்டது.[3]
மக்கள் தொகையியல்
தொகு3091.48 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[4] யதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,26,465 ஆகும்.[4] இப்பகுதியில் நெய்யப்படும் போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள் புகழ் பெற்றதாகும்.
மாவட்ட நிர்வாகம்
தொகுயதாத்ரி-புவனகிரி மாவட்டம், பொங்கிர் மற்றும் சௌதுப்பல் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு வருவாய் கோட்டங்களில் 16 மண்டல்கள் உள்ளது.[3]
மண்டல்கள்
தொகுயதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின் 16 மண்டல்கள்:
வ. எண். | பொங்கிரி வருவாய் கோட்டம் | சௌதுப்பல் வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | அட்டகுதுரு | பி. பூதான் போச்சம்பள்ளி |
2 | அலேர் | சௌதுப்பல் |
3 | அத்மாகுர் (எம்) | நாராயண்பூர் |
4 | பீபீநகர் | இராமன்னா பேட்டை |
5 | பொங்கிரி | வலிகொண்டா |
6 | பொம்மலராமாபுரம் | |
7 | மொடகொண்டூர் | |
8 | மொத்கூர் | |
9 | ராஜாப்பேட்டை | |
10 | துர்காப்பள்ளி | |
11 | யதாகிரிகுட்டா |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016.
- ↑ "District Profile". Official website of Yadadri district. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
- ↑ 3.0 3.1 "Yadadri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 12 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ 4.0 4.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.