யந்த்ரோதரகா அனுமன் கோயில், அம்பி

கர்நாடகத்தில் உள்ள அனுமன் கோயில்

யந்த்ரோ தரகா அனுமன் கோயில் ( பிராணதேவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) (Yantrodharaka Hanuman Temple also known as Pranadeva Temple)) என்பது இந்தியாவின் கர்நாடகத்தின் அம்பி நகரில் அனுமனுக்காக அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.[1] யந்த்ரோதாரக அனுமனின் கோயில் மத்துவ துறவியான வியாசதீர்த்தரால் பாடப்பெற்ற தலமாகும்.[2] அனுமன் கோயிலுக்கு அருகில் இராமருக்கான கோதண்டராமர் கோயில் உள்ளது. இது இந்த இடத்தில் இராமரும், அனுமனும் இணைந்ததற்கு சான்றாக உள்ளது. கர்நாடக மாநிலம் அம்பியில் துங்கபத்ரை ஆற்றங்கரையில் ஒரு குன்றின் உச்சியில் இக்கோயில் அமைந்துள்ளது. சீதையைத் தேடிவந்த இராமர் அனுமனை முதன்முதலாக இங்குள்ள மால்யவன மலையில் சந்தித்ததாக தொன்மங்கள் கூறுகின்றன.[3][4]

யந்த்ரோதரகா அனுமன் கோயில்
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
அமைவு:அம்பி
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:வியாசதீர்த்தர்

அமைவிடம் தொகு

இந்தக் கோயில் அம்பி தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 341 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கோயில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இந்தக் குன்று துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. குன்றின் உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் செல்ல 575 படிகள் ஏறவேண்டும்.[5]

மூலவர் தொகு

இந்தக் கோயியில் கருங்கல் பாறையில் அனுமன் புடைப்புச் சிற்பமாக உள்ளார். அதில் யந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தில் பத்மாசனம் நிலையில் அனுமன் காட்சியளிக்கிறார். அவரது வலது கை வியாக்யானமுத்திரையிலும் இடது கை தியானமுத்திரையிலும் உள்ளது. அவர் உடலில் கிரீடமகுடம் மற்றும் பிற வழக்கமான ஆபரணங்களை அணிந்துள்ளார். கோயிலின் கருவறையைச் சுற்றி வெளியே உள்ள ஒரு வட்டத்தில் 12 குரங்குகள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்தபடி முதுகைகாட்டியபடி உள்ள யந்திர சிற்பம் உள்ளது. இது வியாசதீர்த்தர் அனுமனின் அருள் வேண்டி 12 நாட்கள் செய்த பூசையை குறிப்பிடுவதாக உள்ளது.[6]

வியாசராஜாவினால் சிலை நிறுவப்படல் தொகு

யந்த்ரோ தரகா அனுமன் சிலை வியாசதீர்த்தரால் அமைக்கபட்டது.[7] மேலும் வியாசராஜர் இந்த இறைவன் மீது யந்த்ரோதாரக “அனுமன் தோத்திரம்” என்று ஒரு சிறிய பாடலையும் இயற்றியுள்ளார்.[8]

குறிப்புகள் தொகு

  1. Anthony J. Evensen (2007). Warrior-king, Sʹiva-Bhakta, deity: reconsidering Rāma at Vijayanagara. University of Wisconsin,Madison. பக். 563. https://books.google.com/books?id=TqpxAAAAMAAJ. 
  2. S. Settar (1990). Hampi, a medieval metropolis. Kala Yatra. பக். 29. https://books.google.com/books?id=h-AfAAAAIAAJ. 
  3. Anila Verghese (1995). Religious Traditions at Vijayanagara: As Revealed Through Its Monuments. Manohar Publications. பக். 50. https://books.google.com/books?id=zyluAAAAMAAJ. 
  4. Shubha Vilas (2016). The Chronicles Of Hanuman. Om Books International. பக். 255. https://books.google.com/books?id=twJyDQAAQBAJ. 
  5. "பக்தர்களை நோக்கி தவமிருக்கும் ஹனுமன்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
  6. K. M. Suresh (1998). Sculptural Art of Hampi. Directorate of Archaeology and Museums. பக். 152. https://books.google.com/books?id=r7xmluMu-FsC. 
  7. https://www.worldcat.org/title/sri-raghavendra-the-saint-of-mantralaya-a-translation-of-sri-raghavendra-mahimai/oclc/759686178?referer=di&ht=edition Vol 1,3. Vol 1; Pages 78-81 Vol 3; Pages 311-313
  8. "Yantroddharaka Stotra Lyrics in English and Meaning | Anjaneya Stotram". 11 September 2017.

வெளி இணைப்புகள் தொகு