யலோவா மாகாணம்
யலோவா மாகாணம் (Yalova Province, துருக்கியம்: Yalova ili ) என்பது வடமேற்கு துருக்கியில், மர்மாரா கடலின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அருகில் உள்ள மாகாணங்களாக தெற்கில் பர்சா, கிழக்கில் கொசேலி ஆகியவை உள்ளன. யலோவா மாகாணத்தின் மக்கள் தொகை 2010 இல் 203,741 ஆக இருந்தது. 1930 க்கு முன்னர், யலோவாவைச் சுற்றியுள்ள பகுதிகள் கோகேலி மாகாணத்தின் ஒரு மாவட்டமாக இருந்ததது. 1930 முதல் 1995 வரை, இது இஸ்தான்புல் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது; 1995 ஆம் ஆண்டில், இப்பகுதி பிரிக்கப்பட்டு தற்போதைய யலோவா மாகாணமாக ஆக்கப்பட்டது.
யலோவா மாகாணம்
Yalova ili | |
---|---|
துருக்கியில் யலோவா மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பிராந்தியம் | கிழக்கு மர்மரா |
துணைப் பிராந்தியம் | கோகர்லி |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | தெகிர்தா |
பரப்பளவு | |
• மொத்தம் | 847 km2 (327 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 2,62,234 |
• அடர்த்தி | 310/km2 (800/sq mi) |
இடக் குறியீடு | 0226 |
வாகனப் பதிவு | 77 |
மாகாண தலைநகரமாக யலோவா நகரம் உள்ளது.
மாவட்டங்கள்
தொகுயலோவா மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
- அல்தனோவா
- அர்முத்லு
- சிப்டிகோயி
- இன்னார்சிக்
- முனையம்
- யலோவா
மாகாணத்தின் குறிப்பிடத்தக்கவர்கள்
தொகு- முஹர்ரெம் இன்ஸ் - அரசியல்வாதி
- மெஹ்மத் ஒகூர் - என்பிஏ கூடைப்பந்து வீரர்
- செப்னெம் ஃபெரா - பாடகர்
- இசில் (İzel Çeliköz) - பாடகர்
காட்சியகம்
தொகு-
யலோவாவின் டெர்மலுக்கு அருகிலுள்ள சு டீன் அருவி
-
அர்முட்லுவின் படகு துறைமுகம்
-
யலோவாவில் ஒரு சந்தை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.