யாகூ! நிலப்படம்

யாகூ! மேப்ஸ் யாகூ! வலையமைப்பின் ஓர் தேசப்படச் சேவையாகும். இதன் பிரதான போட்டியாளர்களாக கூகிள் மேப்ஸ் மற்றும் Mapquest விளங்குகின்றன.

தேசப்படச் சேவைகள்

தொகு

பிரதான யாகூ! மேப்ஸ் இணையத்தளம் அமெரிக்கா கனடா நாடுகளில் வாகனங்களைச் செலுத்தும் வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன.

  • முகவரிப் புத்தகம்: பதிவு செய்யப்பட்ட யாகூ! பயனர்கள் அடிக்கடிப் பாவிக்கப்படும் முகவரிகளைச் சேமித்துப் பாவிக்கலாம். எனவே மீண்டும் மீண்டும் தட்டச்சுச் செய்யவேண்டியதில்லை.
  • நிகழ்நிலைப் போக்குவரத்து நெரிசல்கள்: போக்குவரத்து நிலைகள், விபத்துக்கள் வீதியின் நிலைபோன்றவை நிகழ்நிலையில் அவதானிக்கக்கூடியவை.
  • விருப்பமான இடங்கள்: ஸ்மாட்வியூவின் மூலம் வர்தக மற்றும் ஏனைய இடங்களைக் கிளிக் செய்யக்கூடிய ஐகான் மூலம் முகவரி, தொலைபேசி, வேறுதகவல்களைப் பெறும் இணைப்புக்கள் போன்றவற்றைப் பெறலாம்.
  • வாகனம் செலுத்தும் வழிகாட்டிகள்: வாகனம் செலுத்தும் வழிகாட்டிகளை அச்சிட்டுப் பார்க்கலாம், இதை இணைப்பாக மின்னஞ்சலூடாக நகர்பேசிகளுக்கும் அனுப்பலாம்.

யாகூ! லோக்கல் மேப்ஸ் பீட்டா

தொகு

புதிய மேம்படுத்தப் பட்ட யாகூ! மேப்ஸ் பீட்டா இப்போது கிடைக்கின்றது. இது பல்வேறு பட்ட புதிய வசதிகளை அகன்றஅலை இணைபுள்ளவர்களுக்கு வழங்கி வருகின்றது. இது அடோப் (அடோபி) பிளாஷ் (முன்னைய மக்ரோமீடியா பிளாஷ்) எழுதப்பட்டுள்ளது. இதன் வசதிகளாவன.

  • இழுக்கக் கூடிய தேசப்படம் - தேசப்படங்களானது மவுஸ்ஸினாலோ அல்லது Arrow Keys ஐப்பாவித்தோ பக்கங்களை இழுத்துப் பார்கலாம்.
  • பல்வேறு இடங்களுக்கூடான வாகனங்களைச் செலுத்துதல்
  • தேசப்படத்தில் காண்தல்: வர்தகநிலையங்கள் மற்றும் வேறு இடங்களைத் தேசப்படமூடாகக் காணவியலும்.
  • செய்மதிப் படம்:உலகரீதியாக தேசப்படங்களுடன் சேர்த அல்லது தனியான செய்மதிப்படதைப் பார்க்கவியலும்.
  • போகும் பாதைகளை Waypoints ஊடாகக்குறிப்பிடுதல்

இதைவிட நிகழ்நிலைப் போக்குவரத்து நெரிசல்கள், முகவரிப்புத்தகம், தொலைபேசிக்கு அனுப்புதல் போன்றவசதிகளும் உண்டு

யாகூ! மேப்ஸ் இணையசேவை

தொகு

தேசப்படத் தரவுகள்

தொகு

யாகூ! மேப்ஸ் வீதிகள் மற்றும் வெக்டர் முறையிலான தரவுகளை நவ்ரெக், டெலிஅட்லஸ் மற்றும் பலபொதுவுடமையிலிருந்தே பெறுகின்றனர். வீதிகளின் விபரங்கள் அமெரிக்கா,கனடா, போட்டோறிக்கோ, விர்கின் ஐலண்ட், போன்ற இடங்களில் கிடைக்கின்றன. நாடுகளின் எல்லைகள், நகரங்கள், நீர்த்தேங்கள் போன்ற தகவல்கள் உலகின் ஏனைய பகுதிகளில் கிடைக்கின்றன. ஓரளவு தெளிவான செய்மதிப் புகைப்படம் முழு உலகிற்கும் கிடைக்கின்றது. அமெரிக்க மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட நகரங்களில் 1-2 மீட்டர் துல்லியமாக காணக்க்கூடியதாகவுள்ளது.

ஏனைய தேசப்படப் போட்டல்கள்

தொகு

இதுபோன்ற அல்லது இதிலுள்ள சிலசேவைகளை வேறுபட்ட நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!_நிலப்படம்&oldid=3484648" இலிருந்து மீள்விக்கப்பட்டது