யாக்கோபு மெய்செனெய்மர்

செருமனிய வேதியியலாளர் (1876-1934)

யாக்கோபு மெய்செனெய்மர் (Jakob Meisenheimer) என்பவர் 14 சூன் 1876 – 2 டிசம்பர் 1934 வரையான காலத்தில் வாழ்ந்த ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார். கரிம வேதியியல் துறைக்காக இவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக மெய்செனெய்மர் அணைவுச் சேர்மங்கள் குழுவிற்கான கட்டமைப்பை முன்மொழிந்தது மிகப்பிரபலமான கொடையாகும். பெக்மான் மறுசீராக்கல் வினைக்கான வினைவழி முறையையும் இவரே முன்மொழிந்தார் [1]. இறுதிக் காலத்தில் பிரிடின்-என்-ஆக்சைடு தயாரிப்பதற்கான தொகுப்பு முறையைக் கண்டறிந்து அறிவித்தார்.

யாக்கோபு மெய்செனெய்மர்
Jakob Meisenheimer
யாக்கோபு மெய்செனெய்மர்
பிறப்பு(1876-06-14)14 சூன் 1876
செருமன் பேரரசு
இறப்பு2 திசம்பர் 1934(1934-12-02) (அகவை 58)
துபிங்கன், செருமனி
வாழிடம்செருமனி
தேசியம்செருமானியர்
பணியிடங்கள்மியூனிக் பல்கலைக் கழகம் ,
கிரெய்ப்சுவால்டு பல்கலைக்கழகம்,
துபிங்கன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மியூனிக் பல்கலைக் கழகம்
ஆய்வு நெறியாளர்பிரெடெரிக் கார்ல் யோகானெசு தையீல்
அறியப்படுவதுமெய்செனெய்மர் அணைவுச் சேர்மம்,
பெக்மான் மறுசீராக்கல் வினை வழிமுறை

மேற்கோள்கள் தொகு

  1. Jakob Meisenheimer (1902). "Ueber Reactionen aromatischer Nitrokörper". Justus Liebigs Annalen der Chemie 323 (2): 205–246. doi:10.1002/jlac.19023230205. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கோபு_மெய்செனெய்மர்&oldid=3295427" இலிருந்து மீள்விக்கப்பட்டது