யாதகிரி கோட்டை

யாதகிரி கோட்டை (Yadgir Fort) என்பது யாதகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான கருநாடகத்தில் யாதகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். 100 மீட்டர் (328 அடி) உயரமுள்ள ஒற்றைப் பாறைக் கற்களின் மேல் கட்டப்பட்டதால் இந்தக் கோட்டை குறிப்பிடத்தக்கது.

யாதகிரி கோட்டை
யாதகிரி கோட்டை is located in கருநாடகம்
யாதகிரி கோட்டை
யாதகிரி கோட்டை
யாதகிரி கோட்டை is located in இந்தியா
யாதகிரி கோட்டை
யாதகிரி கோட்டை
கருநாடகத்தில் யாதகிரி கோட்டை அமைவிடம்
ஆள்கூறுகள் 16°45′31″N 77°08′16″E / 16.758604°N 77.137756°E / 16.758604; 77.137756
இடத் தகவல்
மக்கள்
அனுமதி
ஆம்

வரலாறு

தொகு

யாதகிரி கோட்டை மேற்கு சாளுக்கியப் பேரரசால் கட்டப்பட்டதாகவும், பின்னர் யாதவ வம்சத்தின் வசம் வந்ததாகவும் நம்பப்படுகிறது.[1] கோட்டைக்குள், ஐந்து கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகள் 10 அல்லது 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மேலும் சாகர் நகரத்தைச் சேர்ந்த ஜெகநாத் என்பர் இக்கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.[2] மோதி தாலிப் நுழைவாயிலில் அமைந்துள்ள 1546ஆம் ஆண்டைச் சேர்ந்த மற்ற இரண்டு அரசாணைகளும், மசூதியின் சுவர்களில் அமைந்துள்ள 1573ஆம் ஆண்டைச் சார்ந்த ஓர் அரசாணையும் இக்கோட்டை முதலாம் இப்ராகிம் ஆதில் ஷாவிற்கு சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றது.[2] இந்தக் கோட்டை பாமினி சுல்தானகம், ஆதில் சாகி வம்சம் மற்றும் நிசாம் போன்ற இராஜ்ஜியங்களின் ஆளுகையில் இருந்ததாகத் தெரிவிக்கின்றது.[2] குலாம் யஸ்தனி 1929 முதல் 1930 வரை கோட்டையை ஆய்வு செய்தார்.[2]

நிலப்பரப்பு

தொகு

யாதகிரி கோட்டை பாறையின் மேலுள்ள நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மேலும் யாதகிர் நகரத்தை நோக்கி அமைந்துள்ளது. இந்தக் கோட்டை 100 மீட்டர் அகலமும், 850 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு பெரிய ஒற்றைக் கற்பாறையின் மேல் அமைந்துள்ளது.[3]

அமைப்பு

தொகு

யாதகிரி கோட்டைக்குள் பல கட்டமைப்புகள் உள்ளன. அதிகபட்சமாக 10 அங்குல விட்டம் கொண்ட பீரங்கிகள், தரைப்படை முகாம்கள், மூன்று பண்டைய இந்து கோயில்கள் மற்றும் ஓர் இடைக்கால மசூதி, கொடி கொத்தளங்கள், கிணறுகள், கால்வாய்கள் மற்றும் களஞ்சியங்கள் அல்லது மறைவிடங்களாகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி கட்டமைப்புகள் கோட்டையில் அமைந்துள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Yadagiri Fort | Forts in Karnataka | Karnataka Tourism". Karnataka Tourism (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  2. 2.0 2.1 2.2 2.3 "A strong hold on the past". Deccan Herald (in ஆங்கிலம்). 2011-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  3. "Yadgir Fort, Yadgir".
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதகிரி_கோட்டை&oldid=4084285" இலிருந்து மீள்விக்கப்பட்டது