குலாம் யஸ்தானி

இந்தியத் தொல்லியல் நிபுணர்

குலாம் யஸ்தானி (Ghulam Yazdani) (22 மார்ச் 1885 - 13 நவம்பர் 1962) பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது ஐதராபாத் இராச்சியத்தில் தொல்லியல் துறையின் நிறுவனர்களில் ஒருவராக இருந்த ஒரு இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1913 முதல் 1940 வரை எபிகிராபியா இண்டிகாவின் அரபு மற்றும் பாரசீக இணைப்பினைத் திருத்தி வெளியிட்டார். ஐதராபாத் மாநிலத்தில் உள்ள முக்கிய மசூதிகள், அஜந்தா குகைகள், எல்லோரா, ஆலம்பூர் குழுமக் கோயில்கள், ராமப்பா கோயில், பீதர் கோட்டை மற்றும் தௌலதாபாத் கோட்டை உட்பட, ஐதராபாத் மாநிலத்தில் உள்ள இசுலாமிய, பௌத்த, இந்து மற்றும் சைனத் தளங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

குலாம் யஸ்தானி
"பிரித்தானிய பேரரசின் சிறப்புமிக்க ஆணையின் அதிகாரி"
பிறப்பு(1885-03-22)22 மார்ச்சு 1885
தில்லி, பிரித்தானிய இந்தியா
இறப்பு13 நவம்பர் 1962(1962-11-13) (அகவை 77)
தில்லி, இந்தியா
பணிகல்வெட்டியல், தொல்லியல்
பிள்ளைகள்சுபைதா யஸ்தானி உட்பட 7 பேர்
விருதுகள்பத்ம பூசண்
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்முகமதன் ஆங்கிலோ -ஓரியண்டல் கல்லூரி
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்
  • அரசுக் கல்லூரி, இலாகூர்
  • ராஜசாகி கல்லூரி
  • புனித இசுடீவன் கல்லூரி, தில்லி

யஸ்தானி, தலைமையிலான தொல்லியல் ஆய்வுகள், நிசாம் ஆட்சியின் தொல்லியல் துறையின் வருடாந்திர அறிக்கைகளாக அவ்வப்போது வெளியிடப்பட்டன.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

யஸ்தானி, 22 மார்ச் 1885 அன்று தில்லியில் பிறந்தார்.[1] இவர் ரெவ். ஜே. காட்ஃப்ரே எஃப் டே மற்றும் சார்லஸ் பிரீர் ஆண்ட்ரூஸ் ஆகியோரின் கீழ் கல்வி பயின்றார்.[2] இளம் வயதில் யஸ்தானி மௌலவி முகம்மது இஸ்ஹாக் மற்றும் ஷம்சுல் உலமா மௌலவி நசீர் அஹ்மத் ஆகியோரிடமும் பயிற்சி பெற்றார்.[3] 1903 இல், இவர் தனது இடைநிலைத் தேர்வில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதலிடத்தைப் பிடித்தார், மேலும் 1905 இல், தனது இளங்கலைத் தேர்வில் அரபு, கீழைப் பாரம்பரியம் மற்றும் ஆங்கிலத்தில் முதல் இடத்தைப் பிடித்தார். மேலும் மூன்று தங்கப் பதக்கங்களையும்..[3] இவர், 1915 இல் பாரசீக மற்றும் அரபு கல்வெட்டுகளுக்கான இந்திய அரசாங்கத்தின் கல்வெட்டு எழுத்தாளராக ஜோசப் ஹொரோவிட்சுக்குப் பிறகு, 1941 வரை அந்தப் பதவியில் இருந்தார். 1907 ஆம் ஆண்டில், இவர் தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பாரசீகப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். மேலும் 1909 ஆம் ஆண்டில், சர் ஹென்றி ஷார்ப் [4] இவரை வங்காளத்தில் உள்ள ராஜசாகியிலுள்ள அரசுக் கல்லூரியில் அரபுப் பேராசிரியராக நியமித்தார்.[3] 1913 இல், பஞ்சாப் அரசு இவரை இலாகூரில் உள்ள அரசுக் கல்லூரியில் அரபு மொழிப் பேராசிரியராக நியமித்தது.

நிசாமின் ஆதிக்கத்தின் தொல்லியல் துறையின் இயக்குநர்

தொகு

ஜான் மார்ஷலின் பரிந்துரையின் பேரில், இவர் 1914 இல் ஐதராபாத் நிசாமின் ஆதிக்கத்தின் தொல்லியல் துறையை ஒழுங்கமைக்க ஐதராபாத்து அனுப்பப்பட்டார். அங்கு இவர் துறையின் முதல் இயக்குநரானார். மேலும், 1943 இல் ஓய்வு பெறும் வரை 30 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அப்போது, தொல்லியல் துறையின் ஆண்டு அறிக்கையைத் திருத்தி வெளிய்ட்டார்.[5]

முனைவர் யஸ்தானி 1915 இல் முதன்முறையாக பீதருக்கு சென்றார். அங்குள்ள நினைவுச்சின்னங்களை முழுமையாகப் பழுதுபார்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு விரிவான திட்டத்தை வரைந்தார். மேலும் இந்தப் பணியை ஐதராபாத் மாநில அரசு ஐதராபாத் நிசாம் ஓசுமான் அலி கானின் கீழ் மேற்கொண்டது.[6] 1917 இல் பீதரின் பழங்காலங்கள் என்ற தலைப்பில் ஒரு வழிகாட்டி புத்தகத்தை இவர் அறிமுகப்படுத்தினார். பின்னர், இவர் நிசாம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பீதர்: அதன் வரலாறு மற்றும் நினைவுச்சின்னங்கள் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். இது 1947 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகத்தில் அச்சிடப்பட்டார் [7]

பழங்கால நாகரிகத்தின் நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பது மற்றும் ஆய்வு செய்தல் மற்றும் அகழ்வாராய்ச்சி செய்தல், குறிப்பாக எல்லோரா, அஜந்தா மற்றும் பீதர் போன்றவற்றில் இவர் ஆற்றிய பணிகள் இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன. முனைவர் யஸ்தானி பல புத்தகங்களை எழுதினார். .அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னும் பின்னும் அஜந்தா மற்றும் எல்லோராவின் படைப்புகள் பற்றி இவர் எட்டு தொகுதிகளை எழுதினார்.[8] யஸ்தானி அரச கழக ஆசியச் சமூகத்தின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினராகவும், மும்பை இசுலாமிய ஆராய்ச்சிச் சங்கத்தின் கெளரவ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உசுமானியா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதில் ஈடுபட்டார்.[9] 1936 ஆம் ஆண்டில், இவருக்கு "பிரித்தானிய பேரரசின் சிறப்புமிக்க ஆணையின் அதிகாரி" ( OBE ) என்ற பட்டம் வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்களில் இருந்து பல கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றார். ஹாரூன் கான் ஷெர்வானி போன்ற தக்காணத்தில் பணியாற்றிய அடுத்த தலைமுறை அறிஞர்களுக்கு முனைவர் யஸ்தானி ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார். மேலும், ஷெர்வானி புருஷோத்தம் மகாதேவ் ஜோஷியுடன் (இயக்குநர், பாம்பே ஆர்கைவ்ஸ்) இணைந்து இடைக்கால தக்காணத்தின் வரலாறு என்ற இரண்டு தொகுதிப் பணிகளுக்காக மிகவும் பிரபலமானவர்.[10]

கௌரவம்

தொகு

வரலாறு மற்றும் தொல்லியல் துறைக்கான இவரது சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 1959 இல் பத்ம பூசண் விருதை வழங்கியது [11]

சொந்த வாழ்க்கை

தொகு

யஸ்தானி, 1909 இல் பத்ரு ஜஹான் பேகம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் இருந்தனர். குலாம் யஸ்தானி, நவம்பர் 13, 1962 இல் இறந்தார் [12]

உசாத்துணை

தொகு
  • Yazdani, Ghulam; Hussein, Shaikh Chand (1900). Mulk-i 'anbar : ya'ni saltanat-i nizam shahiyah. Hyderabad: Matbu`ah `Ahad-i Afrin.
  • Yazdani, Ghulam (1917). The Antiquities of Bidar. Calcutta: Baptist Mission Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120605015.
  • Yazdani, Ghulam (1922). The Temples at Palampet. Calcutta: Superintendent of Government Printing.
  • Yazdani, Ghulam (1927). Guide to Ajanta Frescoes. Hyderabad: Archaeological Department.
  • Yazdani, Ghulam (1929). Mandu: The City of Joy. 1929: Oxford University Press.{{cite book}}: CS1 maint: location (link)
  • Yazdani, Ghulam (1930 – 1955). Ajanta: the colour and monochrome reproductions of the Ajanta Frescoes based on photography. London: Oxford University Press. {{cite book}}: Check date values in: |date= (help)
  • Yazdani, Ghulam, ed. (1936). The story of the Archaeological Department, 1914-1936: a souvenir of the Silver Jubilee of His Exalted Highness the Nizam. Hyderabad: Archaeological Department of H.E.H. The Nizam's Dominions.
  • Yazdani, Ghulam (1947). Bidar: Its History and Monuments. London: Oxford University Press.
  • Yazdani, Ghulam (1952). History of the Deccan (in three volumes). London, Bombay: Published under the authority of the government of Hyderabad by Oxford University Press.
  • Yazdani, Ghulam (1960). The Early History of the Deccan (in two volumes). Oxford: Oxford University Press.
  • COMMEMORATION VOLUME: Sherwani, H.K., ed. (1966). Dr. Ghulam Yazdani commemoration volume. Hyderabad: Maulana Abul Kalam Azad Oriental Research Institute.

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Bhushan Dr. Ghulam Yazdani(1885-1962)". bidarhistorica.org. {{cite web}}: Missing or empty |url= (help)
  2. Sherwani, H.K., ed. (1966). Dr. Ghulam Yazdani commemoration volume. Hyderabad: Maulana Abul Kalam Azad Oriental Research Institute. p. 4.
  3. 3.0 3.1 3.2 Sherwani, H.K., ed. (1966). Dr. Ghulam Yazdani commemoration volume. Hyderabad: Maulana Abul Kalam Azad Oriental Research Institute. p. 5.
  4. 1916 New Year Honours
  5. Sohoni, Pushkar, and Amol Kulkarni, ‘Index to the Annual Reports of the Archaeological Department of His Exalted Highness The Nizam's Dominions’ in Journal of Deccan Studies, vol. 6 no. 1 (Jan–Jun 2009).
  6. The Antiquities of Bidar. Calcutta: Baptist Mission Press. 1917.
  7. Bidar: Its History and Monuments. London: Oxford University Press. 1947.
  8. Ajanta: the colour and monochrome reproductions of the Ajanta Frescoes based on photography. Oxford University Press.
  9. ibid., Sherwani, Dr. Ghulam Yazdani, p. 8.
  10. . Director of Print. and Publication Bureau, Govt. of Andhra Pradesh. 
  11. "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs, Government of India. ()
  12. "The man history forgot". The Hindu. 24 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/the-man-history-forgot/article5495950.ece. 

14. The man history forgot, The Hindu, 24 December 2013
15. 'Padma Bhushan Dr. Ghulam Yazdani - A hero ignored,' by Dr. Rehaman Patel, Karnataka Muslims, 25 February 2014

வார்ப்புரு:PadmaBhushanAwardRecipients 1954–59

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_யஸ்தானி&oldid=4165428" இலிருந்து மீள்விக்கப்பட்டது