பீதர் கோட்டை

பீதர் கோட்டை (Bidar Fort, கன்னடம்: ಬೀದರ್ ಕೋಟೆ), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பீதர் நகரில் அமைந்துள்ளது. இது பகமானியர் வம்சத்தின் அலாவுதீன் என்ற அரசரால் கட்டப்பட்டது.[1][2][3] கரஞ்சிரா ஆறு இக்கோட்டைக்கு அருகில் ஓடுகிறது.

பீதர் கோட்டை
பகுதி: பீதர்
பீதர், கர்நாடகா
முன்புறத் தோற்றம்
பீதர் கோட்டை is located in கருநாடகம்
பீதர் கோட்டை
பீதர் கோட்டை
ஆள்கூறுகள் (17°55′19″N 77°31′25″E / 17.9219°N 77.5236°E / 17.9219; 77.5236)[1]
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது கர்நாடக அரசு
மக்கள்
அனுமதி
ஆம்
இட வரலாறு
கட்டிய காலம் 15 ஆம் நூற்றாண்டு
கட்டியவர் அலாவுதீன் பகுமான்
கட்டிடப்
பொருள்
கிரானைட் கற்கள், சுண்ணாம்பு பூச்சு

புவியியல் தொகு

பீதர் நகரமும் கோட்டையும் கர்நாடக மாநிலத்தின் வடகோடியில் பீதர் மேட்டுநிலத்தின் விளிம்பில் அமைந்துள்ளன. மேட்டுநிலப் பகுதி தாழ்ந்த செந்நிறக் களிமண் குன்றுகளாக கோதாவரியின் முதன்மை துணை ஆறான மஞ்சிரா ஆற்றுக்கு வடக்கே முடிவடைகின்றது. மற்றொரு சிற்றாறு, கரஞ்சியா ஆறு, இந்த தாழ்நிலங்களினூடே பாய்ந்து மஞ்சிரா ஆற்றில் கலக்கிறது.[4][5] கர்நாடகாவிலுள்ள கோதாவரிப் படுகையின் ஒரே அங்கமாக பீதர் மாவட்டம் திகழ்கிறது.[6]

இப்பீடபூமி 2,200 அடிகள் (670 m) உயரமுள்ளதாக உள்ளது. 22 மைல்கள் (35 km) நீளமும் தன் அகண்ட பகுதியில் 12 மைல்கள் (19 km) அகலமும் உடையது.[1] இந்த மேட்டுநிலத்தின் பரப்பு 190 சதுர கிலோமீட்டர்கள் (73 sq mi) ஆகும்.[1] பீதர் கோட்டை இந்த மேட்டுநிலத்தின் விளிம்பில் சீரற்ற சாய்சதுர வடிவில் வடக்கிலும் கிழக்கிலும் சுவர்களுடன் கட்டப்பட்டுள்ளது.[7]

தொன்மைவாய்ந்த தலைநகரம் கல்யாணி (மேலைச் சாளுக்கியரின் பசவகல்யாண்) பீதருக்கு மேற்கே 40 மைல்கள் (64 km) தொலைவில் அமைந்துள்ளது.[1][4]

கட்டிட அமைப்பு தொகு

இக்கோட்டை பாரசீக கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. இசுலாமிய சின்னங்கள் காணப்படுகின்றன. இதன் சுற்றுச்சுவர், மதில், வாயில் ஆகியன அழகியன எனவும் பாதுகாப்பானவை எனவும் பெயர் பெற்றன. இக்கோட்டைக்கு ஏழு வாசல்கள் உள்ளன. சுற்றிலும் இசுலாமிய அரசர்களின் நினைவு கட்டிடங்கள் உள்ளன.

படங்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Heritage araeas". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 2009-11-07.
  2. Islamic culture, Volume 17. Islamic Culture Board. 1943. பக். 27, 30. http://books.google.com/books?id=FVWM6CK75hoC&q=Gulbarga+Fort&dq=Gulbarga+Fort&lr=. பார்த்த நாள்: 2009-11-07. 
  3. "Bidar City Municipal Council". Tourism. Government of Karnataka. Archived from the original on 2009-08-28. பார்க்கப்பட்ட நாள் 2013-08-13.
  4. 4.0 4.1 "Bidar". Encyclopædia Britannica. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 17 April 2015.
  5. "Bidar District". Imperial Gazetteer of India. 8. Digital South Asia Library, University of Chicago. 1908. பக். 64. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V08_170.gif. பார்த்த நாள்: 17 April 2015. 
  6. "River Systems of Karnataka". Government of Karnataka, Water Resources Department. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
  7. Yazdani, Ghulam (1 January 1995). "Chapter 4 - Monuments.". Bidar: Its History and Monuments. Motilal Banarsidass. பக். 28–64. GGKEY:KB5EZYWXR98. https://books.google.com/books?id=w6xpQpOCtzAC&pg=PA28. பார்த்த நாள்: 17 April 2015. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்_கோட்டை&oldid=3563871" இலிருந்து மீள்விக்கப்பட்டது