ஓசுமான் அலி கான்

2ஆவது மக்களவை உறுப்பினர்

மிர் ஓசுமான் அலி கான், ஏழாம் அசாப் சா (Osman Ali Khan, Asaf Jah VII, 5[3] அல்லது 6 ஏப்ரல் 1886 – 24 பெப்ரவரி 1967),[5] என்பவர் பிரித்தானிய இந்தியாவின் மிகப் பெரிய மன்னர் அரசான ஐதராபாது இராச்சியத்தின் கடைசி நிசாம் (ஆட்சியாளர்) ஆவார்.[6] இவர் தனது 25-ஆவது அகவையில் 1911 ஆகத்து 19 அன்று முடிசூடி,[7] ஐதராபாதை 1948 இல் இந்தியா இணைக்கும் வரை அதன் ஆட்சியாளராக இருந்தார்.[8][9] இவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.[10] இவரது செல்வம் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருந்ததாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.[10] இவரது உருவப்படம் 1937 இல் வெளிவந்த டைம் இதழின் முன்பக்கத்தில் வெளியிடப்பட்டது.[11] ஒரு பகுதி-தன்னாட்சி மன்னராக, இவர் தமது சொந்த ஐதராபாதி ரூபாய் நாணயத்தை அச்சிட்டு வந்தார். அத்துடன், இவரது தனியார் கருவூலத்தில் தங்க, வெள்ளிப் பாளங்கள் £100 மில்லியனும், நகைகள் £400 மில்லியன் (2008 மதிப்பீடு) இருந்ததாகக் கூறப்படுகிறது.[10][12] இவரது செல்வத்தின் முக்கிய மூலம் கோல்கொண்டா சுரங்கம் ஆகும், இதுவே அக்காலகட்டத்தில் வைரங்கள் விநியோகிக்கும் சுரங்கம் ஆகும்.[12][13][14] இவற்றில் ஜேக்கப் வைரம், £50 மில்லியன் (2008) மதிப்புள்ளதாகும்,[15][16][17] நிசாம் இதனை ஒரு காகித எடையாகப் பயன்படுத்தினார்.[18]

மிர் ஒசுமான் அலி கான்
1926 இல் ஒசுமான் அலி கான்
7-ஆவது ஐதராபாத் நிசாம்
ஆட்சிக்காலம்29 ஆகத்து 1911 –
17 செப்டெம்பர் 1948
பட்டம் மட்டும்: 17 செப்டெம்பர் 1948 – 24 பெப்பிரவரி 1967[1]
முடிசூட்டுதல்18 September 1911[2]
முன்னையவர்மகுபூப் அலி கான், ஆறாம் அசாப் சா
பின்னையவர்பர்காத் அலி கான், எட்டாம் அசாப் சா (பட்டம் மட்டும்)
பிரதமர்
பட்டியலைப் பார்க்க
பிறப்பு(1886-04-05)5 ஏப்ரல் 1886 [3] அல்லது (1886-04-06)6 ஏப்ரல் 1886
புராணி அவேலி, ஐதராபாது, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
(இன்றைய தெலங்காணா, இந்தியா)
இறப்புபெப்ரவரி 24, 1967(1967-02-24) (அகவை 80)
இராஜாவின் அரண்மனை, ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
(இன்றைய தெலங்காணா, இந்தியா)
புதைத்த இடம்
சுடி மசூதி, (இராஜாவின் அரண்மனை எதிர்), ஐதராபாது, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
(இன்றைய தெலங்காணா, இந்தியா)
துணைவர்துல்கான் பாசா பேகம் மற்றும் 7 பேர்
குழந்தைகளின்
பெயர்கள்
18 மகன்கள் மற்றும் 16 மகள்கள்
உருதுنواب میر عثمان علی خان
மரபுஅசாப் சாகி வம்சம்
தந்தைமகுபூப் அலி கான், ஆறாம் அசாப் சா
தாய்அசுமத்-உசு-சாகுரின்னிசா பேகம்
மதம்சுன்னி இசுலாம்[4]

இவரது 37-ஆண்டுகால ஆட்சியில், மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது, தொடருந்து, சாலைகள், விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இவர் "நவீன ஐதராபாத் கட்டிடக் கலைஞர்" என்று அறியப்பட்டார், ஐதராபாத் நகரில் பல பொது நிறுவனங்களை நிறுவிய பெருமைக்குரியவர், இவற்றில் உசுமானியா பல்கலைக்கழகம், ஒசுமானியா பொது மருத்துவமனை, ஐதராபாத் ஸ்டேட் வங்கி,[19] பேகம்பேட்டை விமான நிலையம், தெலங்காணா உயர் நீதிமன்றம் ஆகியவை சிலவாகும். 1908 பெரு வெள்ளம் போன்ற ஒன்றைத் தவிர்க்க ஓசுமான் சாகர் ஏரி, ஹிமாயத் சாகர் ஆகிய நீர்த்தேக்கங்கள் நகரில் கட்டப்பட்டன.[20]

நிசாம் தொடக்கத்தில் இந்தியாவுடன் இணைவதற்கு விரும்பியிருந்தார், ஆனாலும், 1947 விடுதலையுடன், அவர் தனது மாநிலத்தை புதிதாக உருவாக்கப்பட்ட தேசத்துடன் இணைக்க விரும்பவில்லை. அதற்குள், தெலுங்கானா கலகம், இரசாக்கர்கள் என்று அழைக்கப்படும் ஒரு தீவிர போராளிகளின் எழுச்சி போன்றவை காரணமாக அவரது ஆற்றல் பலவீனமடைந்தது, அவர்களை அவரால் அடக்க முடியவில்லை. 1948-இல், இந்திய இராணுவம் ஐதராபாது மாநிலத்தை ஆக்கிரமித்து இணைத்தது, நிசாம் சரணடைய வேண்டியிருந்தது. விடுதலைக்குப் பிறகு, அவர் 1950 - 1956 இற்கிடையில், ஐதராபாத் மாநிலத்தின் ராஜ்பிரமுக் ஆனார், அதன் பிறகு மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராட்டிராவின் ஒரு பகுதியாக மாறியது.[21][22]

1951 இல், அவர் நிசாம் எலும்பியல் மருத்துவமனையை (இப்போது நிசாம் மருத்துவ அறிவியல் கழகம் (NIMS) என்று அழைக்கப்படுகிறது) கட்டத் தொடங்கினார், அதை 99 ஆண்டு குத்தகைக்கு வெறும் ரூ.1 மாத வாடகைக்கு அரசாங்கத்திடம் கொடுத்தார்.[23] நிலமற்ற விவசாயிகளுக்கு மறு விநியோகம் செய்வதற்காக அவர் 14,000 ஏக்கர் (5,700 எக்டேர்) நிலத்தை வினோபா பாவேயின் பூதான் இயக்கத்திற்குத் தனது தனிப்பட்ட நிதியத்தில் இருந்து நன்கொடையாக வழங்கினார்.[7][24]

மேற்கோள்கள்

தொகு
  1. Ali, Mir Quadir (17 September 2019). "Hyderabad's tryst with history". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/opinion/op-ed/170919/hyderabads-tryst-with-history.html. "The question now is: What exactly happened on September 17, 1948? [...] The Nizam's radio broadcast meant the lifting of the house arrest of Government of India's Agent General K.M. Munshi, allowing him to work on a new government, with the Nizam as Head of State." 
  2. Benjamin B. Cohen, Kingship and Colonialism in India's Deccan, 1850–1948 (Macmillan, 2007) p81[need quotation to verify]
  3. 3.0 3.1 Jaganath, Santosh (2013). The History of Nizam's Railways System. Laxmi Book Publication. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781312496477. Archived from the original on 15 September 2020. பார்க்கப்பட்ட நாள் 22 July 2020.
  4. "No parallel to Hyderabad's Muharram procession in India" (in en). News18. news18. 24 November 2012. https://www.news18.com/news/india/no-parallel-to-hyderabads-muharram-procession-in-india-523357.html. 
  5. "Here are five super-rich people from the pages of history!". The Economic Times. 1 May 2015. https://economictimes.indiatimes.com/here-are-five-super-rich-people-from-the-pages-of-history/articleshow/47108897.cms. 
  6. "Family of Indian royals wins £35m court battle against Pakistan". BBC News. 2 October 2019. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  7. 7.0 7.1 ":: The Seventh Nizam - The Nizam's Museum Hyderabad, Telangana, India". thenizamsmuseum.com. Archived from the original on 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 16 July 2020.
  8. "This day, that year: How Hyderabad became a part of the union of India". 16 September 2018. Archived from the original on 30 December 2018. பார்க்கப்பட்ட நாள் 16 July 2020.
  9. "HYDERABAD: Silver Jubilee Durbar". Time. 22 February 1937 இம் மூலத்தில் இருந்து 24 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070524114531/http://www.time.com/time/magazine/article/0,9171,770599,00.html. 
  10. 10.0 10.1 10.2 Zupan, M.A. (2017). Inside Job: How Government Insiders Subvert the Public Interest. Inside Job: How Government Insiders Subvert the Public Interest. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 10–115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-15373-8. LCCN 2016044124.
  11. "The Nizam of Hyderabad". Time. Archived from the original on 6 March 2005.
  12. 12.0 12.1 Jhala, A.D. (2015). Royal Patronage, Power and Aesthetics in Princely India. Empires in Perspective. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-31656-5.
  13. "Globalisation of Golconda". https://www.rediff.com/money/2007/nov/12spec.htm. 
  14. "Making money the royal way!". https://economictimes.indiatimes.com/making-money-the-royal-way-/articleshow/2975511.cms. 
  15. McCaffrey, Julie (3 February 2012). "Exclusive: The last Nizam of Hyderabad was so rich he had a £50 million diamond paperweight". Mirror.co.uk (London). https://www.mirror.co.uk/news/uk-news/exclusive-the-last-nizam-of-hyderabad-was-so-rich-302814. 
  16. Bedi, Rahul (12 April 2008). "India finally settles £1million Nizam dispute". The Daily Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 12 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220112/https://www.telegraph.co.uk/news/worldnews/1584818/India-finally-settles-1million-Nizam-dispute.html. 
  17. "Exhibitions at National Museum of India, New Delhi(India)". 2 April 2009. Archived from the original on 2 April 2009.
  18. Shah, Tahir. "Alan the Red, the Brit who makes Bill Gates a pauper." Times Online. The Sunday Times. 7 October 2007. Web. 19 9ay 2010.
  19. Pagdi, Raghavendra Rao (1987) Short History of Banking in Hyderabad District, 1879-1950. In M. Radhakrishna Sarma, K.D. Abhyankar, and V.G. Bilolikar, eds. History of Hyderabad District, 1879-1950AD (Yugabda 4981-5052). (Hyderabad : Bharatiya Itihasa Sankalana Samiti), Vol. 2, pp.85-87.
  20. "Nature Discovery in Telangana :: Telangana Tourism". telanganatourism.gov (in ஆங்கிலம்). Archived from the original on 15 August 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
  21. "A Memorable Republic Day". pib.nic.in. Archived from the original on 23 October 2017. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
  22. Karnataka State Gazetteer: Gulbarga (in ஆங்கிலம்). Director of Printing, Stationery and Publications at the Government Press. 1966. Archived from the original on 15 September 2020. பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.
  23. "The Last Nizam who put Hyderabad on global map" இம் மூலத்தில் இருந்து 7 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190407145029/https://telanganatoday.com/the-last-nizam-who-put-hyderabad-on-global-map. 
  24. Sunil, Mungara (4 September 2016). "Much of Bhoodan land found to be under encroachment in city | Hyderabad News" (in en). The Times of India. TNN / Updated. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Much-of-Bhoodan-land-found-to-be-under-encroachment-in-city/articleshow/54001626.cms. 

வெளி இணைப்புகள்

தொகு
ஓசுமான் அலி கான்
அசாப் சாகி வம்சம்
பிறப்பு: 8 ஏப்ரல் 1886 இறப்பு: 24 பிப்ரவரி 1967
அரச பட்டங்கள்
முன்னர்
மகுபூப் அலி கான், ஆறாம் அசாப் சா
ஐதராபாத் நிசாம்
1911–1948
இந்திய மேலாட்சியுடன் இணைக்கப்பட்டது

வார்ப்புரு:S-pre

புதிய பட்டம் — பட்டம் சார்ந்தது —
ஐதராபாத் நிசாம்
1948–1967
பின்னர்
பர்காத் அலி கான், எட்டாம் அசாப் சா
அரசு பதவிகள்
முன்னர்
மிர் யூசுப் அலி கான், மூன்றாம் சலார் சங்
ஐதராபாத் இராச்சியத்தின் பிரதமர்
1914–1919
பின்னர்
சர் சயீத் அலி இமாம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமான்_அலி_கான்&oldid=4090777" இலிருந்து மீள்விக்கப்பட்டது