முசி ஆற்றின் பெருவெள்ளம், 1908

மூசி ஆற்றின் பெருவெள்ளம் (Great Musi Flood) என்பது 1908 செப்டம்பர் 28 அன்று ஐதராபாத்தில் முசி ஆற்றின் ஏற்பட்ட ஒரு பேரழிவு வெள்ளமாகும். [1] அப்போது ஐதராபாத்து நகரம் ஐதராபாத்து மாநிலத்தின் தலைநகராக இருந்தது. நிசாம், மிர் மஹபூப் அலிகான் இதை ஆட்சி செய்து வந்தார். [2]

முசி ஆற்றின் பெருவெள்ளம், 1908
1908 ஆம் ஆண்டின் பெரும் வெள்ளத்தின் போது அகதிகள் ஒரு பாலத்தின் குறுக்கே நடந்து செல்கின்றனர், பின்னணியில் அப்சல் தர்வாசா.
நாள்28 செப்டம்பர் 1908 - 29 செப்டம்பர் 1908
அமைவிடம்ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்போது தெலங்காணா, இந்தியா)
இறப்புகள்15,000க்கும் மேற்பட்டவர்கள்
சொத்து சேதம்£1,250,000
1908 ஆம் ஆண்டின் பெரும் மூசி ஆற்றின் வெள்ளத்தின் போது பாதியளவு நீரில் மூழ்கிய அப்போதைய பிரித்தானியரின் அலுவலகத்தின் நுழைவாயில்

உள்ளூரில் துக்கியானி சீதாம்பர் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளம் ஐதராபாத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை சிதைத்து. 50,000 பேரைக் கொன்றது.[3][4] இது அப்சல், முசல்லம் ஜங், புராணபுல் நகரின் இரண்டு பகுதிகளுக்கு இடையேயான ஒரே இணைப்பாக இருந்த சதர்காட் ஆகிய மூன்று பாலங்களை அடித்துச் சென்றது.[5]

ஐதராபாத்தில் வெள்ளம் தொகு

 
1895இல் முசி ஆற்றின் காட்சி

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஐதராபாத்து நகரத்தில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ள அழிவுக்கு முசி ஆறு காரணமாக இருந்தது. 1908 செப்டம்பர் 27 அன்று ஆபத்தான முறையில் ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகாலை 2 மணியளவில் புராணா புல் பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்தபோது முதல் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது. காலை 6 மணியளவில் ஒரு முகிற்பேழ் மழை பொழிந்தது. 1908 செப்டம்பர் 28 செவ்வாய்க்கிழமை வெள்ளம் பாலத்தை உடைத்தது: ஆறு 60 அடி உயர்ந்து, நகரம் வழியாக ஓடியது.[6] 36 மணி நேரத்தில், 17 அங்குல மழை பதிவாகியது. மேலும் அப்சல் குஞ்ச் பகுதியில் நீர் மட்டம் சுமார் 11 அடி (3.4 மீ) உயர்ந்தது. பிற இடங்களில் இன்னும் அதிகமாக இருந்தது.

சேதம் தொகு

 
வெள்ளத்தில் சில பேரைக் காப்பாற்றிய புளிய மரம். [7]

அப்சல்குஞ்சிலுள்ள கோல்சாவாடி மற்றும் கன்சி பஜார் பகுதிகள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாயின. வெள்ளம் 80,000 க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளியது. மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியை வீடற்றவர்களாக ஆக்கியது. [8] இது நிசாம் மருத்துவமனையை முற்றிலுமாக அழித்து, நோயாளிகளை வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இது 1860களில் கட்டப்பட்ட அப்சல் குஞ்ச், முசல்லம் ஜங் மற்றும் சதர்காட் பாலங்களையும் அடித்துச் சென்றது.

உசுமானியா மருத்துவமனைக்குள் 200 ஆண்டுகள் பழமையான புளிய மரம் அதில் ஏறிய 150க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியது. [9] பிரபல உருது கவிஞர் அம்ஜத் ஐதராபாத்தி, அவரது தாய், மனைவி மற்றும் மகள் உட்பட அவரது முழு குடும்பமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டார்; அவர் மட்டுமே அவரது குடும்பத்தில் தப்பினார். இந்த இழப்புகள் அவரது கயாமத்-இ-சோக்ரா என்ற கவிதைகளில் மனச்சோர்வை பெரும்பாலும் பிரதிபலிக்கிறது. [10]

நிவாரண முயற்சிகள் தொகு

நிசாமும், கொடையாளர் கிஷென் பெர்ஷாத்தும் சேர்ந்து 500,000 ரூபாய் நன்கொடைகளை வழங்கினர். மேலும் 1,000,000 ரூபாய் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டது. [8] மக்கள் தங்கள் சொந்த நெருக்கடிகளைச் சமாளிக்க பத்து நாட்கள் உத்தியோகபூர்வ விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் பத்து சமையலறைகள் அமைக்கப்பட்டன. அவை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 13 வரை செயல்பட்டு வந்தன.

பின்விளைவு தொகு

வரலாற்று பிரளயம் 1908இல் இரட்டை நகரங்களின் வளர்ச்சியை மாற்றியமைத்தது. இது திட்டமிடப்பட்ட வளர்ச்சியை அவசியமாக்கியது. [11][12]

குழு பரிந்துரைகள் தொகு

வெள்ளம் மீண்டும் வருவதைத் தடுப்பது மற்றும் குடிமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளுடன் சையத் அசாம் உசேனி என்பவர் 1909 அக்டோபர் 1 ஆம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தார். ஏழாவது நிசாம், மிர் உஸ்மான் அலிகான், 1912இல் ஒரு நகர மேம்பாட்டு அறக்கட்டளையை அமைத்தார். ஆற்றில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பையும் கட்டினார்.

சர் விசுவேசுவரய்யாவின் சேவைகள் தொகு

நகரத்தின் புனரமைப்புக்கு ஆலோசனை வழங்கவும், உதவவும், இதுபோன்ற பயங்கரமான பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வகுக்கவும் நிசாம் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் எம். விசுவேசுவரய்யாவை அழைத்தார். அவருக்கு ஐதராபாத்து மாநில பொதுப்பணித் துறையின் பொறியியலாளர்கள் உதவினார்கள். அதிக விசாரணை மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு, ஐதராபாத்து நகரத்த்தை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற நகரத்திற்கு மேலே உள்ள படுகையில் வெள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளை நிர்மாணிப்பதன் மூலம் வர வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். [1] தலைநகருக்கு வடக்கே சில மைல் தொலைவில் இந்த நீர்த்தேக்கங்களை உருவாக்க அவர்கள் முன்மொழிந்தனர்.

பிரபல பொறியாளர் நவாப் அலி நவாஸ் ஜங் பகதூரின் கீழ் 1920ஆம் ஆண்டில் ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டப்பட்டது. நகரத்திலிருந்து பத்து மைல் (16 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்த அணை ஓசுமான் சாகர் ஏரி என்று அழைக்கப்படுகிறது. 1927ஆம் ஆண்டில், ஈசியில் (முசியின் துணை ஆறு) மற்றொரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டு ஹிமாயத் சாகர் என்று பெயரிடப்பட்டது. இந்த ஏரிகள் முசி ஆற்று வெள்ளத்தைத் தடுக்கின்றன. மேலும், ஐதராபாத்து நகரத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாகவும் இருக்கின்றன. [12]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Law 1914.
  2.    "Hyderabad (city)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 14. (1911). Cambridge University Press. 
  3. "Los Angeles Herald 3 October 1908 — California Digital Newspaper Collection". Cdnc.ucr.edu. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
  4. "Archived copy". Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. Ifthekhar, J. S. (11 July 2013). "Musing over the Musi". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
  6. Ifthekhar, J. S. (28 September 2012). "Remembering the deluge of 1908". The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/remembering-the-deluge-of-1908/article3944923.ece. 
  7. https://telanganatoday.com/this-tamarind-tree-at-osmania-general-hospital-still-stands-tall
  8. 8.0 8.1 Lynton, 1974, ப. 18.
  9. Ifthekhar, J. S. (28 September 2012). "Remembering the deluge of 1908". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
  10. "Hyderabad to observe 104th anniversary of Musi flood". The Siasat Daily. 20 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
  11. Murali, D (2006-04-22). "Floods proved a blessing in disguise". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 மே 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060514124147/http://www.hindu.com/pp/2006/04/22/stories/2006042200130300.htm. 
  12. 12.0 12.1 Shahid, Sajjad (30 September 2012). "Sitamber: the harbinger of torment". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 9 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130809131747/http://articles.timesofindia.indiatimes.com/2012-09-30/hyderabad/34177011_1_musi-bus-terminus-ends-today. 

நூலியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு