ஹிமாயத் சாகர்

ஹிமாயத் சாகர் (Himayat Sagar) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு செயற்கை ஏரியாகும். இது ஒரு பெரிய செயற்கை ஏரியான ஓசுமான் சாகர் ஏரிக்கு இணையாக அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் சேமிப்பு திறன் 2.9 டி.எம்.சி அடியாக இருக்கிறது.

ஹிமாயத் சாகர்
ஹிமாயத் சாகர் is located in தெலங்காணா
ஹிமாயத் சாகர்
ஹிமாயத் சாகர்
அமைவிடம்ரங்காரெட்டி மாவட்டம் , தெலங்காணா, இந்தியா
ஆள்கூறுகள்17°18′N 78°21′E / 17.300°N 78.350°E / 17.300; 78.350
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வெளியேற்றம்முசி
வடிநில நாடுகள்இந்தியா

வரலாறு

தொகு

ஐதராபாத்திற்கு குடிநீர் ஆதாரத்தை வழங்குவதற்கும், நகரத்தை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடனும், 1908ஆம் ஆண்டில் ஐதராபாத்து சந்தித்த முசி ஆற்றின் பெருவெள்ளத்தாலும் முசி ஆற்றின் கிளை நதியான எஸியில் நீர்த்தேக்கங்களின் கட்டுமானம் 1927இல் கட்டப்பட்டது. ஐதராபாத்தின் கடைசி நிசாமின் ஆட்சிக் காலத்தில் இது கட்டப்பட்டது. மேலும், அவரது இளைய மகன் ஹிமாயத் அலிகானின் பெயரிடப்பட்டது. [1]

ஹிமாயத் சாகர் அணை மற்றும் ஓசுமான் சாகர் ஏரி நீர்த்தேக்கங்கள் சமீபத்தில் வரை ஐதராபாத்து மற்றும் சிக்கந்தராபாத் இரட்டை நகரங்களுக்கு தொடர்ச்சியான நீர் விநியோகத்தை வழங்கின. மக்கள்தொகை வளர்ச்சி காரணமாக, நகரங்களின் நீர் வழங்கல்-தேவையை பூர்த்தி செய்ய அவை போதுமானதாக இல்லை.

முகமது உசேனின் மகன் பிரபல பொறியாளர் மறைந்த காஜா மொகைதீன் மத்ரி மேர்பார்வையில் இது கட்டப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

https://timesofindia.indiatimes.com/city/hyderabad/himayatsagar-may-be-left-high-and-dry-by-2036/articleshow/61541422.cms

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிமாயத்_சாகர்&oldid=3846508" இலிருந்து மீள்விக்கப்பட்டது