ராமப்பா கோயில்


ராமப்பா கோயில் அல்லது இராமலிங்கேஸ்வரர் கோயில் (Ramappa Temple or Ramalingeswara), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், பாலம்பேட் கிராமத்தில் உள்ளது.

ராமப்பா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலுங்கானா
மாவட்டம்:ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்
அமைவு:பாலம்பேட் கிராமம்
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:ரேச்சர்ல ருத்திரன்
கட்டடக் கலைஞர்:கதம்பர் கட்டிடக் கலை

இராமலிங்கேஸ்வரருக்கு அமைக்கபட்ட இக்கோயிலை, பொ.ஊ. 11ம் நூற்றாண்டில் கட்டியவர் காக்கத்தியர் படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் ஆவார்.

இக்கோயிலை யுனெஸ்கோ நிறுவனம் சூலை 2021-இல் உலகப் பாரம்பரியப் பண்பாட்டுக் களமாக அறிவித்துள்ளது.[1]

அமைவிடம்

தொகு

காக்கத்தியர்களின் தலைநகரமான வாரங்கல் நகரத்திலிருந்து 77 கிமீ தொலவிலும், மாநிலத் தலைநகரம் ஐதராபாத்திலிருந்து 157 கிமீ தொலைவிலும் ராமப்பா கோயில் உள்ளது. [2]

இக்கோயிலின் பொ.ஊ. 1213ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்பின் படி, காக்காத்திய மன்னர் கணபதி தேவாவின் ஆட்சிக்காலத்தில், அவரது தலைமைப் படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் என்பவர் இக்கோயிலைக் கட்டியதாக அறியப்பாடுகிறது.[3]

இக்கோயில் அழகிய சிற்பங்களுடன் செம்மணற்கலால் கட்டப்பட்டுள்ளது. மேலும் கோயிலைத் தாங்கும் தூண்கள் கருங்கற்களால் நிறுவப்பட்டுள்ளது.[4]கோயில் கருவறை செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.[5] இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை சீரமைத்தும், பராமரித்தும் வருகிறது. .[6]

கோயில் காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ramappa Temple: How a site is selected for World Heritage List
  2. "The Shiva temples at Palampet". Archived from the original on 2006-10-18. பார்க்கப்பட்ட நாள் 2006-09-11.
  3. Gollapudi Srinivasa Rao. "Ramappa temple never fails to surprise visitors". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  4. Michell, 385
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-01. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
  6. "Warangal Temples, Telangana". Archived from the original on 2006-08-18. பார்க்கப்பட்ட நாள் 2006-09-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமப்பா_கோயில்&oldid=3960865" இலிருந்து மீள்விக்கப்பட்டது