யானையைப் பழக்குதல்
காட்டு யானையைக் குழியில் விழச் செய்தும், பழக்கிய பெண்யானையைக் கொண்டு ஆண்யானைகளை அழைத்துவரச் செய்தும் யானைகளைத் தன் இருப்பிடத்தில் வைத்துக்கொண்டு அந்த யானைகள் தன் சொல்லைப் புரிந்துகொண்டு செயல்படுமாறு அதற்குக் கற்றுத் தருவர். இந்தத் தொழில் பற்றிய செய்திகள் சங்ககால இலக்கியங்களில் உள்ளன.
தமிழ்நாட்டில் வாழ்ந்த ஆரியர் பெண்யானைகளைக் கொண்டு பிடித்துவந்து பழக்கும் தொழிலைச் செய்து வந்தனர். [1]
வடமொழிச் சொற்களைச் சொல்லி யானையைப் பழக்கி வைத்திருப்பர். [2]
சிறுமலை அரசனும், கோடை மலையை வென்று தனதாக்கிக் கொண்டவனும், பயன் தரும் வேள்வி செய்தவனும் ஆகிய தென்னவன் மறவன் (பாண்டிய வேந்தனின் படைத்தலைவன்) நாட்டில் குழியில் விழச் செய்த யானையைப் பழக்கும் இந்தத் தொழில் நடைபெற்றது. [3]
மேற்கோள்
தொகு- ↑ ஆரியர், \ பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, \ தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் \ மார்பு கடி கொள்ளேன்ஆயின்ஆரியர், \ பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, \ தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் \ மார்பு கடி கொள்ளேன்ஆயின் (அகநானூறு 276)
- ↑ தேம் படு கவுள சிறு கண் யானை \ ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த, \ வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து, \ அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென, \ கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35 \ கல்லா இளைஞர், கவளம் கைப்ப (முல்லைப்பாட்டு)
- ↑ தென்னவன் மறவன் \ குழியில் கொண்ட மராஅ யானை \ மொழியின் உணர்த்தும் சிறு வரை (அகநானூறு 13) மராஅ யானை - மருவாத யானை