யாழ்ப்பாணக் கடற்கரைச் சமர்

யாழ்ப்பாணக் கடற்கரைச் சமர் (Battle off the coast of Jaffna) என்பது இலங்கைக் கடற்படைக்கும் விடுதலைப் புலிகளின் கப்பல்களுக்கும் இடையே நடந்த ஒரு கடற்படைச் சமராகும். இலங்கைத் தரப்பின் தகவல்களின்படி, இது இலங்கை உள்நாட்டுப் போரின்போது 2008, நவம்பர் முதல் நாள் சனிக்கிழமையன்று யாழ்ப்பாணக் கடற்கரையில் இலங்கையின் வடக்கு ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பில் நடந்தது. கிளர்ச்சிக் கப்பல்களைச் எதிர்கொண்டு கடற்படை துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதால் போர் தொடங்கியதாக இலங்கை அரசாங்க சுங்க அதிகாரி டி.கே. பி. தாசங்காயக்க தெரிவித்தார்.