யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி (Jaffna College Of Technology) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்பக் கல்வி நிலையம் ஆகும்.

வரலாறு தொகு

யாழ்ப்பாண தொழிநுட்பவியல் கல்லூரி 1959ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டு நிதியுதவியுடன் கனிட்ட தொழிநுட்ப பாடசாலை என ஆரம்பிக்கப்பட்ட்து. பின்னர் 1964ஆம் ஆண்டு கனிட்ட தொழிநுட்பக்கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 1971ஆம் ஆண்டு பல் தொழிநுட்ப நிறுவனம் (Poly Technical College) ஆகவும் 1984ஆம் ஆண்டு தொழிநுட்பக்கல்லூரி ஆகவும் தரமுயர்த்தப்பட்டது.

இவ்வாறாக உயர்வு பெற்று வந்த தொழிநுட்பவியல் கல்லூரி 2009ஆம் ஆண்டு கொரிய நாட்டு நிதி உதவியுடன் தொழிநுட்பவியல் கல்லூரியாக (College of Technology) தரமுயர்த்தப்பட்டு வடமாகாணத்தில் தொழிலில் கல்வியை வழங்கும் ஒரு முன்னோடி நிறுவனமாக விளங்குகின்றது. இங்கு தொழிநுட்பத்துறை சார்பான பல்வேறு தொழிநுட்ப பட்டறைகள் கொண்டிருப்பது அதன் சிறப்பம்சமாகும்.

துறைகள் தொகு

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள துறைகள் வருமாறு:

  1. தொழில்துறை
  2. பொறியியல்துறை
  3. வர்த்தகத்துறை
  4. பொதுத்துறை
  5. விசேட துறை
  6. டிப்ளோமா துறை