யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. மாவட்டத் தலை நகரும், வட மாகாணத்தின் முக்கிய நகருமாகிய யாழ்ப்பாண நகரம் இப்பிரிவினுள்ளேயே அடங்கியுள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அத்தியடி, சுண்டிக்குளி, கொழும்புத்துறை, ஈச்சமோட்டை, கோட்டை, பெரியகடை, குருநகர், யாழ்ப்பாண நகரம், கொட்டடி, மருதடி, சோனகதெரு, நாவாந்துறை, நெடுங்குளம், பாசையூர், சிறாம்பியடி, சின்னக்கடை, திருநகர், வண்ணார்பண்ணையின் ஒரு பகுதி என்பன இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்துள்ள இப் பிரிவின் மேற்கு, தெற்கு எல்லைகளில் கடல் உள்ளது. வடக்கில் நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன.

இதன் பரப்பளவு 17 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].

குறிப்புக்கள்

தொகு
  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு