யாஸ்மின் குணரத்தின
யாஸ்மின் குணரத்ன (Yasmine Gooneratne; பிறப்பு: 1935) இலங்கை கவிஞர், கதையாசிரியர், பல்கலைக்கழக பேராசிரியர், கட்டுரையாளரும் ஆவார். இலக்கியத்தில் தனது தேச பக்தி படைப்புகள் காரணமாக இவர் பரவலாக இலங்கையில் அறியப்படுகிறார். தற்சமயம் ஆத்திரேலியாவில் வசிக்கின்றார்.[1][2][3][4]
யாஸ்மின் குணரத்தின | |
---|---|
பிறப்பு | 1935 கொழும்பு, இலங்கை |
தொழில் | பல்கலைக்கழகப் பேராசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கல்வியாளர் |
தேசியம் | இலங்கையர் |
யாஸ்மின் குணரத்தின சிலோன் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்றார். சவுத் வேல்ஸ் சிட்னியில் அமைந்திருக்கும் மக்கரி பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகின்றார்.[5][6]
வாழ்க்கை
தொகுயாஸ்மின் 1962 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த மருத்துவரான பிரன்டன் குணரத்னவை மணமுடித்தார். இத் தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
1990 ஆம் ஆண்டு யாஸ்மினுக்கு இலக்கியம் மற்றும் கல்வி சேவைகளுக்காக ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருதை ஆஸ்திரேலியா அரசாங்கம் வழங்கி கௌரவித்தது.[7] இவ் விருதை பெற்ற ஒரே இலங்கையர் இவரே. 1962 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்டி பட்டம் பெற்றார்.[8][9]
இலக்கிய பணி
தொகுஇலங்கையில் ஆங்கில் இலக்கியத்தில் முன்னணி பங்களிப்பாளர்களில் ஒருவராக யாஸ்மின் குணரத்னவும் திகழ்கின்றார்.
யாஸ்மின் 1983 ஆம் ஆண்டின் கறுப்பு சூலை கலவரங்கள் மற்றும் படுகொலைகளினால் ஏற்பட்ட சூழலைப் பற்றி பிக் மாட்ச் 1983 என்ற கவிதையை எழுதினார். இக் கவிதை 1983 இல் நடந்த உண்மை சம்பவங்களை விபரிப்பதாகும்.[10] இலக்கிய திறனாய்வு மற்றும் தேசபக்தி என்பவற்றை கருப்பொருளாக கொண்டு பதினாறு புத்தகங்களை எழுதினார். சேன்ஜ் ஆப் ஸ்கைஸ் இவரது முதல் நாவலாகும். இந் நாவலிற்கு 1991 ஆம் ஆண்டு மார்ஜோரி பர்னாட் லிட்டர்சி விருது வழங்கப்பட்டது. மேலும் 1991 ஆம் ஆண்டு பொதுநலவாய புனைவு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2008 இல் த ஸ்வீட் என்ட் சிம்பிள் கைன்ட் என்ற நாவல் சர்வதேச டப்ளின் இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
1966 தொடக்கம் 1996 வரை வெளியிடப்பட்ட ஆசிய தொடரில் எழுதுதலில் (ரைட்டிங் இன் ஏசியா சிரிஸ்) பங்குபற்றிய எழுத்தாளர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://scholarblogs.emory.edu/postcolonialstudies/2014/06/10/gooneratne-yasmine/scholarblogs.emory.edu. பார்த்தநாள் 2017-11-02
- ↑ https://www.litencyc.com/php/speople.php?rec=true&UID=1807 www.litencyc.com பார்த்தநாள் 2017-11-02
- ↑ https://books.google.lk/books/about/A_Literary_Biography_of_Yasmine_Goonerat.html?id=0rPLoQEACAAJ&redir_esc=y Bramston, Dorothy J(1994)
- ↑ https://www.biblio.com/yasmine-gooneratne/author/1761291 www.biblio.com. பார்த்தநாள் 2017-11-02
- ↑ http://www.nla.gov.au/ms/findaids/9094.html www.nla.gov.au. பார்த்தநாள் 2017-11-02
- ↑ https://www.austlit.edu.au/austlit/page/A29562 www.austlit.edu.au. பார்த்தநாள் 2017-11-02
- ↑ https://honours.pmc.gov.au/honours/awards/870275 department of the prime minister cabinet. பார்த்த நாள் 2017-11-03
- ↑ https://www.mq.edu.au/about_us/faculties_and_departments/faculty_of_arts/department_of_english/staff/professor_yasmine_gooneratne/ பரணிடப்பட்டது 2020-02-17 at the வந்தவழி இயந்திரம் www.mq.edu.au பார்த்தநாள் 2017-11-02
- ↑ https://www.themodernnovel.org/asia/other-asia/sri-lanka/gooneratne/ www.themodernnovel.org. பார்த்தநாள் 2017-11-02
- ↑ http://www.nation.lk/edition/insight/item/40531-a-big-match-referred-unfairly.html பரணிடப்பட்டது 2017-11-07 at the வந்தவழி இயந்திரம் www.nation.com பார்த்தநாள் 2017-11-02