யுகபுருஷ் (நாடகம்)
யுகபுருஷ்: மகாத்மாவின் மகாத்மா (Yugpurush: Mahatma Na Mahatma) என்பது ஜெயின தத்துவவாதியான ஸ்ரீமத் ராஜ்சந்திரஜி மற்றும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவரான மகாத்மா காந்தி ஆகியோருக்கு இடையிலான உறவை அடிப்படையாகக் கொண்ட 2016 ஆண்டைய குஜராத்தி நாடாகமாகும். இந்த நாடகம் காந்தியின் ஆன்மீக பயணத்தை விவரிக்கிறது. இதை உத்தம் காடா எழுதி, ராஜேஷ் ஜோஷியால் இயக்கப்பட்டது. நாடகத்திற்கான இசை சச்சின் – ஜிகார் அமைத்துள்ளார். இது ஸ்ரீமத் ராஜ்சந்திர மிஷனால் தயாரிக்கப்பட்டது. இந்த நாடகம் இந்தி, மராத்தி, கன்னடம், பெங்காலி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. சிறந்த நாடகத்துக்கான 2016 ஆண்டின் 16 வது வருடாந்திர டிரான்ஸ்மீடியா குஜராத்தி ஸ்கிரீன் மற்றும் மேடை விருதை வென்றது. 2017 சூலை வரை இந்த நாடகம் 733 காட்சிகளை நிறைவு செய்துள்ளது.[1][2]
யுகபுருஷ் | |
---|---|
இயக்கம் | ராஜேஷ் ஜோஷி |
கதை | உத்தம் காடா |
இசை | சச்சின் – ஜிகார் |
வெளியீடு | 2016 நவம்பர் |
நாடு | இந்தியா |
மொழி | குஜராத்தி |
கதை
தொகுஅகிம்சையை காந்தி தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்தவர் ராஜ்சந்திரஜி. இவர்தான் காந்தியின் ஆன்மிக குரு. தர்மத்தை ஒருபோதும் தான் இழக்காமல் இருந்ததற்கு ராஜ்சந்திரஜியின் போதனைகள் எப்படி கைகொடுத்தன என்பதை காந்தியே சொல்லும் உத்தியைக் கொண்டதாக, நாடகம் உள்ளது.
பாரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பும் காந்தி, ராஜ்சந்திரஜியை முதன் முதலில் சந்திக்கிறார். அவரது சதாவதானி திறமையை அறிந்து, அவரை கடுமையாக பரிசோதனை செய்கிறார். ராஜ்ச்ந்திரஜி கேள்விப்பட்டே இருக்காத பல்வேறு கவிதைகளையும் சட்டவாக்கியங்களையும் காந்தி சொல்லச் சொல்ல ராய்சந்த் அவற்றை அப்படியே திருப்பிச் சொல்கிறார். அவர்களின் உரையாடல் மெல்ல ஆன்மீகத்தின் பக்கம் திரும்புகிறது. ராஜ்ச்ந்திரஜி சமண மதத்தின் அடிப்படைக் கருத்துக்களில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். ராஜ்ச்ந்திரஜியின் பேச்சு அவரை வசீகரித்ததுவிடுகிறது. அவரது கருத்துகள் காந்தியின் கடைசி காலம்வரை தொடர்ந்து வந்தன. ராஜ்சந்திரஜி – காந்தி இடையே நேரடியாக சில ஆண்டுகளும், கடிதப் போக்குவரத்து மூலமாக ஏறக்குறைய 10 ஆண்டுகளும் நட்பு நீடித்திருக்கிறது. காந்தி இவருக்கு சுமார் 200 கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களுக்கு வரும் பதில்களைப் பொருத்தே காந்தியின் வாழ்க்கை அமைந்துள்ளது. இவர்களுக்கு இடையிலான நட்பின் ஆழத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது இந்த நாடகம்.[3]
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகு- 16 வது வருடாந்திர டிரான்ஸ்மீடியா குஜராத்தி திரை மற்றும் ஸ்டேஜ் விருதுகள் 2016
- சிறந்த நாடகம், மும்பை
- சிறந்த இயக்குநர் (மேடை): ராஜேஷ் ஜோஷி
- சிறந்த துணை நடிகர் (மேடை): புல்கிட் சோலங்கி
- தாதாசாஹேப் பால்கே எக்ஸலன்ஸ் விருதுகள் 2017
- சிறந்த நடிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Play looks at a scholar who shaped Mahatma Gandhi’s spiritual journey". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Play-looks-at-a-scholar-who-shaped-Mahatma-Gandhis-spiritual-journey/articleshow/55445407.cms.
- ↑ "Full list of awards" (PDF). Transmedia. Transmedia. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
- ↑ யுகன் (9 ஆகத்து 2017). "'யுகபுருஷ் – மகாத்மாவின் மகாத்மா'". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2017.