யுனெசுக்கோவின் மொழி நல அளவீடுகள்

யுனெசுக்கோவின் மொழி நல அளவீடுகள் என்பது 2002 - 2003 ஆண்டுகள் காலப் பகுதியில் யுனெசுக்கோவினால் கூட்டப்பட்ட மொழி வல்லுனர் குழுவினால் முன்வைக்கப்பட்ட மொழி நல அளவீடுகள் ஆகும். இது ஒன்பது அளவீடுகளை அல்லது காரணிகளைக் கொண்டது.[1] இந்தக் குழு முன்வைத்த மொழிப் பாதுகாப்புக்கான சட்டகத்தில் இது ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

ஒன்பது காரணிகள்

தொகு
காரணி 1: தலைமுறைகளுக்கு இடையேயான மொழிப் பரிமாற்றம்.
காரணி 2: மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை.
காரணி 3: நாட்டின் மக்கள் தொகையில் மொழி பேசுபவர்களின் விழுக்காடு.
காரணி 4: மொழி பயன்படுத்தும் களங்களின் போக்குக்கள்.
காரணி 5: புதிய களங்களையும் ஊடகங்களையும் மொழி கையாழும் திறன்.
காரணி 6: மொழிக் கல்விக்கும் மொழியறிவுக்குமான பொருட்கள்.
காரணி 7: அரசுகளின் நிறுவனங்களின் மொழிசார் மனப்பாங்குகள் கொள்கைகள். உத்தியோகபூர்வ நிலை மற்றும் பயன்பாடு.
காரணி 8: சமூக உறுப்பினர்களின் அவர்களின் மொழி நோக்கிய மனப்பாங்குகள்.
காரணி 9: மொழி மனப்பாங்குகளும் கொள்கைகளும்: ஊடாட்டமும் சமூக விளைவுகளும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Language Vitality and Endangerment

வெளி இணைப்புகள்

தொகு