யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணம் 34
யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணம் 34 (United Airlines Trip 34) எனப்படும் இது, 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 27-ஆம் நாளன்று, காலை வழமையாக திட்டமிட்டப்படி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்த "போயிங் 247டி" (Boeing 247D) (பதிவு எண்:NC13355) வகையை சார்ந்த வானூர்தி ஒன்று, அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, சான் பிரான்சிஸ்கோ முதன்மை நகரிலிருந்து - அதே மாநிலத்தின் மற்றொரு மாபெரும் நகரமான லாஸ் ஏஞ்சலசுக்கு மேற்கொண்ட பறப்பு ஆகும். அன்றைய பறப்பின்போது காலை 7:38 மணியக்கு விமானிகள் பிழையின் காரணமாக விபத்துக்குள்ளானது. இப்பயணத்தின்போது சேவைப் பணியாளர்கள் மூவர்களும், பயணிகள் 9 பேர்களுமாக மொத்தம் 12 பேர்கள் இருந்துள்ளனர். இணை விமானியின் தவறான காலநிலை கணிப்பால் நிகழ்ந்த இவ்வானூர்தி விபத்தில், பணியாளர்கள் மூவரும், பயணிகள் 12 பேர்களும் (பயணித்த அனைவரும்) கொல்லப்பட்டனர்.[1]
விபத்தின் சுருக்கம் | |
---|---|
நாள் | 1936, டிசம்பர் 27 |
சுருக்கம் | விமானிகள் பிழை |
இடம் | ரைஸ் கேனியன், லாஸ் ஏஞ்சலசு மாவட்டம்,, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பயணிகள் | 9 |
ஊழியர் | 3 |
உயிரிழப்புகள் | 12 (அனைவரும்) |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | "போயிங் 247டி" |
இயக்கம் | யுனைடெட் ஏர்லைன்ஸ் |
வானூர்தி பதிவு | NC13355 |
பறப்பு புறப்பாடு | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
சேருமிடம் | லாஸ் ஏஞ்சலசு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Info List - United Airlines Trip 34". www.theinfolist.com. (c) 2014 -2015. பார்க்கப்பட்ட நாள் 2016-09-08.
{{cite web}}
: Check date values in:|date=
(help)