யுனைட்டட் இந்தியா காலனி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யுனைட்டட் இந்தியா காலனி சென்னை மாநகராட்சியிலுள்ள கோடம்பாக்கம் பகுதியின் ஒரு பிரிவு ஆகும்.
சென்னை மாநகராட்சியில் மிகப் பிரபலமான திரையரங்குகளின் ஒன்றான லிபர்டி திரையரங்கம் இங்கு உள்ளது. இலையோலா மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி (ஆண்கள்), பாட்டிமா மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி (பெண்கள்) ஆகிய இரும்பெரும் பள்ளிக்கூடங்கள் இங்குள்ளன. அண்ணா பூங்கா யுனைட்டட் இந்தியா காலனியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நடைப்பயிற்சி செய்வதற்காகவும் குழந்தைகள் விளையாடுவதற்காகவும் இப்பூங்காவை இப்பகுதி மக்கள் நாடி வருவார்கள். பாட்டிமா தேவாலையம், உயிர்த்தெழுந்த மீட்பர் ஆலையம் என இரு தேவாலயங்களும், நவசக்தி விநாயகர் கோவிலும் இப்பகுதியில் உள்ளன.
யுனைட்டட் இந்தியா காலனியில் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசும் இந்துக்கள். தெலுங்கு, மலையாளம், மற்றும் மார்வாடி மொழி பேசும் மக்களும் இப்பகுதியில் வசிக்கின்றனர். குறிப்பிடும் அளவிற்கு கிறிஸ்தவர்களும் வாழ்வதால் தீபாவளியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையும் இப்பகுதியில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
யுனைட்டட் இந்தியா காலனியின் தபால் குறியீட்டு எண் 600024.