யுரேனியம் போரோ ஐதரைடு

யுரேனியம் போரோ ஐதரைடு (Uranium borohydride) என்பது U(BH4)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். போரோ ஐதரைடுடன் கூடிய இந்த யுரேனியம் அணைவு எளிதில் ஆவியாகிறது. பச்சை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் திண்ம நிலையில் பலபகுதிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் நான்முக ஒற்றைப்படியாக ஆவியாகிறது.

யுரேனியம் போரோ ஐதரைடு
Uranium borohydride
இனங்காட்டிகள்
ChemSpider 15385433 Y
InChI
  • InChI=1S/2BH5.U/h2*1H5;/q2*-1;+2 Y
    Key: KUMAXXHQRVBPEC-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2BH5.U/h2*1H5;/q2*-1;+2
    Key: KUMAXXHQRVBPEC-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
  • [BH5-].[BH5-].[U+2]
பண்புகள்
U(BH4)4
வாய்ப்பாட்டு எடை 297.27 கி/மோல்
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் சிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

யுரேனியம் டெட்ராபுளோரைடுடன் அலுமினியம் போரோ ஐதரைடு சேர்த்து வினைப்படுத்தி யுரேனியம் போரோ ஐதரைடு தயாரிக்கப்படுகிறது :[1]

UF4 + 2 Al(BH4)3 → U(BH4)4 + 2 Al(BH4)F2.

யுரேனியம் டெட்ராகுளோரைடுடன் இலித்தியம் போரோ ஐதரைடு சேர்த்து வெற்றிடத்தில் திண்மநிலை வினைக்கு உட்படுத்துவதன் மூலமாகவும் இச்சேர்மத்தைத் தயாரிக்க முடியும் :[1]

UCl4 + 4 LiBH4 → U(BH4)4 + 4 LiCl.

U(BH4)4 திண்ம நிலையில் பலபகுதிக் கட்டமைப்பைப் பெற்றிருந்தாலும் U(BH3CH3)4 ஒருபகுதிக் கட்டமைப்ப்பிலும் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் உள்ளது.

வரலாறு

தொகு

மன்காட்டன் திட்டக்காலத்தில், யுரேனியத்தின் ஐசோடோப்புகளைப் பிரித்தெடுக்கும் விரவுதல் முறை பிரித்தலுக்கு உகந்த, ஆவியாகும் யுரேனியச் சேர்மங்களை கண்டறிய வேண்டிய தேவை எழுந்தது. 60 ° செ வெப்பநிலையில் 4 மி.மீ.பாதரசம் (530 பாசுகல்) என்ற ஆவியழுத்த அளவில் விரைந்து ஆவியாகும் யுரேனியச் சேர்மமாக யுரேனியம் எக்சாபுளோரைடும் இதையடுத்து விரைந்து ஆவியாகும் சேர்மமாக யுரேனியம் போரோ ஐதரைடும் அறியப்பட்டன. எர்மான் இர்விங் செல்சிங்கெர் மற்றும் எர்பர்டு சார்லசு பிரௌன் இணைந்து யுரேனியம் போரோ ஐதரைடைக் கண்டறிந்தனர். எர்பர்டு சார்லசு பிரௌன் சோடியம் போரோ ஐதரைடையும் கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

யுரேனியம் எக்சாபுளோரைடு அதிக அரிப்புத்தன்மை கொண்ட ஒரு சேர்மமாகும். கையாள்வதற்கு அதிக இடர்பாடுகளைக் கொடுத்ததால் போரோ ஐதரைடிற்குப் பயன்படுத்துவதில் மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்தது. யுரேனியம் எக்சாபுளோரைடு தொடர்பான சிக்கல்கள் களையப்பட்டன. தயாரிக்கும் தொகுப்பு முறைகளும் இறுதி செய்யப்பட்டன. இயற்கையில் போரான் பரவலாக 10B (20%) மற்றும் 11B (80%) என்ற இரண்டு ஓரிடத்தான் வடிவங்களில் காணப்படுவதால், ஐசோடோப்புகளைப் பிரித்தெடுத்தலில் போரோ ஐதரைடுகள் இயல்பற்ற ஈந்தனைவிகளாகக் கருதப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ephritikhine, M. (1997). "Synthesis, Structure, and Reactions of Hydride, Borohydride, and Aluminohydride Compounds of the f-Elements". Chemical Reviews 97 (6): 2193–2242. doi:10.1021/cr960366n. பப்மெட்:11848899. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_போரோ_ஐதரைடு&oldid=4092303" இலிருந்து மீள்விக்கப்பட்டது