யுவகிருஷ்ணா

தமிழ் எழுத்தாளர்

யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர். தொடக்கத்தில் இணைய விவாத தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். குங்குமம், பெண்ணேநீ, ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பில்டர்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். குமுதம் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுத்த முதல் பத்து சிறந்த வலைப்பதிவுகளில் இவரது வலைப்பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை வாரப்பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றிய இவர், இப்போது தினகரன் நாளிதழில் இணைப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து பல்வேறு பிரிவுகளில் வழங்கும் சுஜாதா விருதினை 2011ஆம் ஆண்டு இவர் இணையப் பிரிவில் பெற்றுள்ளார்.[1]

நூல்கள்

தொகு
  • சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
  • விஜயகாந்த்
  • தேமுதிக
  • சைபர் க்ரைம்
  • அழிக்கப் பிறந்தவன்
  • சரோஜாதேவி
  • காதல் வழியும் கோப்பை
  • நடிகைகளின் கதை
  • கங்கையிலிருந்து கூவம் வரை
  • ரைட்டர்ஸ் உலா
  • தாம்பூலம் முதல் திருமணம் வரை
  • பழைய பேப்பர்
  • காட்ஃபாதர்
  • சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்
  • நன்றி மறந்த நாடு
  • தற்கொலைப்படை
  • பிழியப் பிழிய காதல்
  • சீத்தலைப் பாட்டனார் கவிதைகள்
  • கோவை எக்ஸ்பிரஸ்
  • லுங்கி
  • இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
  • ராஜராஜ சோழனுக்கு என்ன ஆச்சு?

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.luckylookonline.com/2011/04/blog-post_19.html யுவகிருஷ்ணாவின் வலைப்பதிவில் அவர் பெற்ற விருதினைப் பற்றி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவகிருஷ்ணா&oldid=3226297" இலிருந்து மீள்விக்கப்பட்டது