யூக்கோ காக்காழு

யூக்கோ காக்காழு (Yūko Kakazu)(嘉数悠子 காக்காழு யூக்கோ) ஒரு யப்பானிய வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி உருவாக்கத்திலும் படிமலர்ச்சியிலும் சிறப்பு தகைமை வாய்ந்தவர்.[1][2] இவர் NAOJ அவாய் வான்காணகச் சுபாரு தொலைநோக்கிக்கான மக்கள் பரப்புரை வல்லுனர் ஆவார்.[1][2][3][4][5]

இளமையும் கல்வியும் தொகு

இவர் யப்பான், ஒகினாவாவில் பிறந்து வளர்ந்தார்.[1][2] நாசா நல்கையில் இவர் பங்குபெற்ற விண்வெளி முகாம் விண்வெளி அறிவியலில் பணியாற்ற வழிவகுத்துள்ளது.[1][2] ஒகினாவா சோகாக்கு உயர்நிலைப்பள்ளியில் தன் கல்வியை முடித்ததும், இவர் தோகோக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தில் அறிவியற் பட்டப் பள்ளியில் படித்தார்.[3] அங்கு முதலில் இவர் வேதியியல் துறையில் சேர்ந்தாலும் பின்னர் இயற்பியல் துறைக்கு மாறியுள்ளார்.[3][6] அப்பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டம் பெற்றதும், இவர் மனோவாவில் உள்ள அவாய் பல்கலைக்கழகத்தில் முதுவர் பட்டமும் வானியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]

வாழ்வும் ஆய்வும் தொகு

இவர் 2008 முதல் பாரீசு வானியற்பியல் நிறுவனத்தில் பல ஆய்வுநிலைகளில் பணிபுரிந்துள்ளார். பின்னர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வாளராக 2010 முதல் பணிபுரியலானார். பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2011 முதல் ஆய்வாளரானார்.[2][3] இவர் இப்போது ட்வத்யேசிய வானியல் அமைப்பின் வான்கானகத்திலும் சுபாரு தொலைநோக்கியிலும் 2013 முதல் ஆய்வாளராக பணிபுரிகிறார்.[2][3]

இவரது ஆய்வுப் புலம், புடவியின் உறுப்புகளாக அமையும் பால்வெளிகளின் தோற்றமும் படிமலர்ச்சியும் ஆகும்.[4][7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 公式サイトの自己紹介ページ
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 プロフィール - 天文学者ゆうこのハワイ便り
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 製作所メンバーが世界で活躍する先輩リケジョに突撃インタビュー Web版「海外でのリケジョライフの楽しさ、教えてください!」vol.1
  4. 4.0 4.1 『美しき「リケジョ」図鑑』、25頁。
  5. "Staff Directory - Subaru Telescope". subarutelescope.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  6. "琉球新報 掲載記事 ~ 天文学者ゆうこのハワイ便り". yukogalaxy.blogspot.jp. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  7. Yuko Kakazu; Esther M. Hu; Michael C. Liu; Peter L. Capak (November 2010). "Hawaii Quasar And T Dwarf survey. I. Method and discovery of faint field ultracool dwarfs". The Astrophysical Journal 723 (1). doi:10.1088/0004-637X/723/1/184. Bibcode: 2010ApJ...723..184K. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூக்கோ_காக்காழு&oldid=3226312" இலிருந்து மீள்விக்கப்பட்டது