யூடித் உரூபின் யங் (Judith (Rubin) Young) (செப்டம்பர் 15, 1952 – மே 23, 2014)[1] ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும்.[2] கல்வியியலாளரும் ஆவார். இவருக்கு அமெரிக்க இயற்பியல் கழகம் 1986 இல் உலகின் தலைசிறந்த இளம் இயற்பியலாளராகத் தேர்வு செய்து முதல் மரியா கோயெப்பர்ட்-மேயர் விருதை வழங்கியது.[3][4][5] "இவரது முன்னோடிப் பால்வெளிக் கட்டமைப்பு ஆராய்ச்சி மிகத் தொடக்கநிலை CO உமிழ்வுப் பரவல் படம் வரைதலும் பிறகு தொடர்ந்து விரிவான மூலக்கூறு வளிமப் பரவலும் சார்ந்த அளக்கையும் அண்மைப் பால்வெளிகளின் விண்மீன்கள் உருவாக்கமும் அடங்கும்."[6]

யூடித் யங்
பிறப்புசெப்டம்பர் 15, 1952
இறப்புமே 23, 2014
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்ஆர்வார்டு பல்கலைக்கழகம், மின்னசோட்டா பல்கலைக்கழகம்
விருதுகள்மரியா கோயெப்பர்ட்-மேயர் விருது

வாழ்க்கை

தொகு

இவர் நிக் இசட். சுகோவில்லியுடன் பால்வெளிகளின் தண்வளிம, கரிம ஓராக்சைடு உள்ளடக்கத்தை கண்டறியும் ஆய்வில் கலந்துகொண்டார்.[5] இந்த இருவரும் பால்வெளிகளில் ஒளியும் வளிமமும் ஒரேவிகிதத்தில் பரவியுள்ளதைக் கண்டறிந்தனர்.[5] வளமான ஆராய்ச்சிதிறம் வாய்ந்த இளம்பெண் அறிவியலாள ரான இவருக்கு 1982 இல் அமெரிக்க வானியல் கழகம் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வழங்கி சிறப்பு செய்தது.[3][5]

இவர் ஆம்கெர்சுட்டில் உள்ல மசாசூசட் பலகலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் பேராசிரியராக உள்ளார்.[7] ஐவர் 130 க்கும் மேலாக ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்; 5 முனைவர் பட்ட மாணவருக்கும் 15 பட்ட மாணவருக்கும் ஆய்வு வழிகாட்டியாக இருந்துள்ளார்.[8] இவர் வானியலாளர் வேரா உரூபின், கணித உயிரியற்பியலாளர் இராபெர்ட் உரூபின் ஆகியோருக்கு மகளாக வாழ்சிங்டன் டி.சி நகரில் பிறந்தார்.[9] இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வானியலில் தகைமையுறு இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[7][8] இவர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார்.[8] இவர் 1989 இல் இணைப்பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.[7] இவர் தன் சூரியச் சக்கர ஆய்வுத் திட்ட்த்துக்காக பெயர்பெற்றவர்.[10] இத்திட்ட நோக்கம் வானியல் அறிவை அடித்தட்டு மக்கள் வரைக் கொண்டுசென்று உமாசு வளாக விளையாட்டுக் களங்களில் பரப்புவதாகும் UMASS campus.[8][10] இவர் வானியகலுக்காக மட்டுமன்றி, உமாசு வளாகத்திலும் தான் வாழும் களமக்களிடமும் ஆற்றிய பணிகளுக்காகவும் புகழ்பெற்றவர்.[7][8]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் பெயர்பெற்ற வானியலாளராகிய வேரா உரூபின் குழந்தைகளில் ஒருவராவார்.[11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. http://digitalcommons.unl.edu/cgi/viewcontent.cgi?article=1121&context=libraryscience
  2. Larsen, Kristine (23 July 1928). "Vera Cooper Rubin". Jewish Women's Archive. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
  3. 3.0 3.1 Oakes, E.H. (2007). Encyclopedia of World Scientists. Facts on File Science Library. Facts On File, Incorporated. p. 792. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-1882-6. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
  4. "Maria Goeppert Mayer Award". APS Physics | APS Home. 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
  5. 5.0 5.1 5.2 5.3 "Obituary: Judy Young, Astronomer Who Built Campus Sunwheel". Office of News & Media Relations | UMass Amherst. 28 May 2014. Archived from the original on 18 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Teske, Richard G. (23 May 2014). "Judith S. Young (1952 - 2014)". American Astronomical Society. Archived from the original on 20 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. 7.0 7.1 7.2 7.3 "Obituary: Judy Young, Astronomer Who Built Campus Sunwheel". Office of News & Media Relations | UMass Amherst இம் மூலத்தில் இருந்து 2021-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210128052809/https://www.umass.edu/newsoffice/article/obituary-judy-young-astronomer-who-built. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 "Judith S. Young (1952 - 2014) | American Astronomical Society". aas.org. Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  9. "Vera Rubin – The Gruber Foundation". பார்க்கப்பட்ட நாள் December 26, 2016.
  10. 10.0 10.1 "A Megalith for the Millennium » American Scientist". www.americanscientist.org. Archived from the original on 2015-09-30. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  11. "A Woman's Place in the Cosmos (washingtonpost.com)". www.washingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
  12. Overbye, Dennis (2016-12-27). "Vera Rubin, 88, Dies; Opened Doors in Astronomy, and for Women" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2016/12/27/science/vera-rubin-astronomist-who-made-the-case-for-dark-matter-dies-at-88.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூடித்_யங்&oldid=3591390" இலிருந்து மீள்விக்கப்பட்டது