யூதா பர்சபா

யூதா பர்சபா என்பவர் புதிய ஏற்பாட்டில் காணப்படும் நபர் ஆவார். திருத்தூதர் பணிகள் 15:22இன் படி, எருசலேமில் இருந்த ஆதி கிறித்தவர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்ததால் இவரையும் சீலாவையும், பவுலேடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு எருசலேம் சங்கத்தின் முடிவுகளை எடுத்துரைக்க கடிதம் கொடுத்து அனுப்பினர். திருத்தூதர் பணிகள் 15:32இன் படி இவரும் சீலாவும் இறைவாக்கினர்கள் எனவும் அதனால் அவர்கள் அங்கிருத்த கிறித்தவகளோடு அதிகம் பேசி ஊக்கமூட்டி அவர்களை உறுதிப்படுத்தினர் எனவும் குறிக்கின்றது.

ஆகையால் நாங்கள் யூதாவையும்,சீலாவையும் அனுப்பி இருக்கிறோம்.அவர்களும் வாய்மொழியால் இதே காரியத்தை அறிவிப்பார்கள்.

என்று எருசலேம் ஆலோசனை சங்கத்தால் கடிதம் அனுப்பப்பட்டது.

முக்கியமான கீழ் வரும் காரியங்களை தவிர, வேறெந்த பாரத்தையும் அவர்கள் மேல் ஏற்றக் கூடாது என்பதாய் அதிலே எழுதப்பட்டிருந்தது.

அவை என்னவெனில்,

1,விக்கிரகங்களுக்கு பலியிடப்பட்டவைகளை புசிக்க கூடாது.

2,இரத்தத்தை புசிக்க கூடாது.

3, கழுத்து நெரிக்கப்பட்டு, இரத்தம் வெளியேறாமல் இருக்கும் மாமிசத்தை புசிக்க கூடாது.

4,மிக முக்கியமாக,வேசித்தனத்துக்கு விலகியிருக்க வேண்டும் என்பதே.

இந்த கடிதத்தை அவர்கள் கொண்டு வந்து,வாசித்து காட்டியபோது இந்த ஊக்கப்படுத்துதலால் அந்த புறவினத்திலிருந்து ஆண்டவரின் ஐக்கியத்தில் வந்தவர்கள் சந்தோசப்பட்டார்கள்.பர்சபா எனப்பட்ட யூதாவும்,சீலாவும் சில காலம் அவர்களோடிருந்து, அவர்களுக்கு புத்தி சொல்லி,விசுவாசத்தில் உறுதியடையச் செய்து அதன் பிறகு சமாதானத்தோடு அங்கிருந்தவர்களாளே அனுப்பி வைக்கப் பட்டனர்.(திருத்தூதுவர் பணிகள் 15:27-33)




"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதா_பர்சபா&oldid=3613778" இலிருந்து மீள்விக்கப்பட்டது