பர்னபா
பர்னபா (பண்டைக் கிரேக்கம்: Βαρναβᾶς), இயற்பெயர் யேசேப்பு, என்பவர் ஆதி கிறித்தவரும் இயேசுவின் சீடர்களுல் ஒருவரும் ஆவார்.[2][3] திருத்தூதர் பணிகள் 4:36இன் படி இவர் சைப்பிரஸில் வாழ்ந்த யூதராவார். திருத்தூதர் பணிகள் 14:14 இவரையும் ஒரு திருத்தூதர் எனக்குறிக்கின்றது. இவரும் பவுலும் திருத்தூது பயணங்கள் மேற்கொண்டு யூத கிறித்தவர்களிடம் புறவினத்தாரான கிறித்தவர்களுக்காக பரிந்து பேசினர்.[2] இவர்கள் இருவரும் எருசலேம் சங்கத்தில் கலந்து கொண்டனர்.[4] பர்னபா மற்றும் பவுல் அனத்தோலியாவில் தொழுகைக் கூடங்களுக்கு வந்திருந்த புறிவினத்தார் பலரை மனந்திருப்பினர்.[5]
பர்னபா | |
---|---|
புனித பர்னபா, திருவோவியம் | |
இறைவாக்கினர், சீடர், அந்தியோக்கியா மற்றும் சைப்பிரஸின் திருத்தூதர், மறைப்பணியாளர் மற்றும் மறைசாட்சி | |
பிறப்பு | தகவல் இல்லை சைப்பிரஸ் |
இறப்பு | 61 கி.பி சைப்பிரஸ் |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் |
முக்கிய திருத்தலங்கள் | புனித பர்னபா மடம், சைப்பிரஸ்[1] |
திருவிழா | ஜூன் 11 |
சித்தரிக்கப்படும் வகை | கைத்தடி; ஒலிவ மரக் கிளை; மத்தேயு நற்செய்தியினை ஏந்திய படி |
பாதுகாவல் | சைப்பிரஸ், அந்தியோக்கியா, ஆலங்கட்டி மழையிலிருந்து காக்கப்பட, அமைதி ஏற்பட |
பர்னபாவைக்குறிது திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுலின் திருமுகங்களிலும் காணக்கிடைக்கின்றது.[2] திர்தூளியன் இவரை எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர் எனக்குறிக்கின்றார்.,[2] ஆயினும் இதற்கு எவ்வித சான்றும் இல்லை.[6]
சுமார் கி.பி 61இல் பர்னபா மறைசாட்சியாக சைப்பிரஸில் கொல்லப்பட்டார் என்பது மரபு.[2] இவர் சைப்பிரஸ் மரபுவழி திருச்சபையினை நிறுவியவர் என நம்பப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா நாள் ஜூன் 11ஆம் ஆகும்.[2]
கொலோசையர் (நூல்) 4இன் அடிப்படையில் பர்னபா, மாற்குவின் உறவினர் என நம்பப்படுகின்றது.[7] சில மரபுகளின் படி எழுபது சீடர்களில் ஒருவராகக்கருதப்படும் அரிஸ்தோபுலுஸ் பர்னபாவின் சகோதரராக நம்பப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ *St Barnabas Monastery
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Barnabas." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
- ↑ Harris names him as a "prominent leader" of the early church in Jerusalem. Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: மேfield. 1985.
- ↑ Durant, Will. Caesar and Christ. New York: Simon and Schuster. 1972
- ↑ Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: மேfield. 1985.
- ↑ "Hebrews, Epistle to the" Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
- ↑ Mark: Images of an Apostolic Interpreter p55 C. Clifton Black - 2001 "infrequent occurrence in the Septuagint (Num 36:11; Tob 7:2) to its presence in Josephus (JW 1.662; Ant 1.290, 15.250) and Philo (On the Embassy to Gaius 67), anepsios consistently carries the connotation of "cousin," though ..."