யூத அறிவியல்

யூத அறிவியல் அல்லது யூத விஞ்ஞானம் (Jewish Science) என்பது புதிய சிந்தனை இயக்கத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு யூத ஆன்மீக சமய இயக்க ஆகும். இதன் பல அங்கத்தவர்கள் வழக்கமாக தொழுகைக் கூடங்களில் வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.[1]

இது ஒரு யூத மெய்யியல் விளக்கமாக, 1900 களில் ராபி அல்பிரட் ஜி. மோசஸ் என்பவரால் கிறித்தவ அறிவியலினதும் புதிய சிந்தனை இயக்கத்தினதும் வளர்ச்சித் தாக்கத்திற்கு பதிலாக கருத்துருப் பெற்றது. எபிரேயப் பாரம்பரியத்தில் தந்தைக்குரிய இடத்தில் கடவுளை மையப்படுத்த, "யூத அறிவியல் அண்டத்தின் உண்மைத்தன்மையில் ஊடுருவும் ஆற்றல் அல்லது வலிமையாக கடவுளைப் பார்க்கிறது.[2] ராபி அல்பிரட் ஜி. மோசஸ் 1916 இல் எழுதிய "யூத அறிவியல்: யூதத்தில் தெய்வீக குணப்படுத்தல்" (Jewish Science: Divine Healing in Judaism) என்ற நூலில் அவருடைய அடிப்படை படிப்பினைகளைக் காணலாம். இவ்வியக்கம் 1922 இல் நிறுவனமாகியது.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூத_அறிவியல்&oldid=3656514" இலிருந்து மீள்விக்கப்பட்டது