யூத கிறிஸ்தவம்
யூத கிறிஸ்தவர்கள் இரண்டாம் கோவில் காலத்தின் பிற்பகுதியில் (கி.பி. முதல் நூற்றாண்டு) யூதேயாவில் தோன்றிய யூதப் பிரிவைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.[1] இந்த யூதர்கள் இயேசு இறைவாக்கு குறிப்பிடும் கூறப்பட்ட மெசியா என்று நம்பினர். அத்தோடு அவர்கள் யூத சட்டத்தை தொடர்ந்து பின்பற்றினர். யூத கிறிஸ்தவம் ஆரம்பகால கிறிஸ்தவத்தின் அடித்தளமாகும். இது பின்னர் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை கிறிஸ்தவமாக வளர்ந்தது.