யூனா கோல்மய்யர்
யூனா கோல்மய்யர் (Juna Kollmeier) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் இப்போது கார்னிகி அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் 2020 இல் தொடங்கவுள்ள சுலோவான் இலக்கவியல் வானளக்கையின் ஐந்தாம் கட்ட இயக்குநராக உள்ளார்[1].
யூனா கோல்மய்யர் Juna Kollmeier | |
---|---|
பணியிடங்கள் | கார்னிகி அறிவியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | ஓகியோ அரசு பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் |
ஆய்வேடு | பால்வெளியிடை ஊடகம்: உட்கவர்தலும் உமிழ்தலும் குலைதலும் (2006) |
ஆய்வு நெறியாளர் | டேவிடு எச். வியன்பர்கு |
இளமையும் கல்வியும்
தொகுஒரு கோடைப் பட்டறை வகுப்பில் விண்மீகளின் வகைபாடு பற்றிய உரையை கேட்பதற்கு முன் இவர் சட்டவியல் படித்து வழக்கறிஞராக விருப்பம் கொண்டிருந்தார்.[2] இவர் தன் இயற்பியல் இளவல் பட்டத்தைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் 2000 இல் பெற்றார்.[3] இவ்ர் பால்வெளியிடை ஊடகம் பற்றி முனைவர் பட்டம் பெற ஓகியோ அரசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர் தன் முனைவர் பட்டத்தை 2006 இல் பெற்றார்.[3][4]
ஆராய்ச்சியும் பணியும்
தொகுஇவரது ஆய்வு புடவியின் கட்டமைப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது.[5] இவர் தொடக்கநிலைப் புடவியின் பாழ்நிலை அலைவுகளில் இருந்து கருந்துளைகளும் பால்வெளிகளும் எப்படி உருவாகின்றன என அறிய, அண்டவியல், நீர்ம இயங்கியல் ஒப்புருவாக்கங்களையும் பகுப்பாய்வுக் கோட்பாட்டையும் பயன்படுத்துகிறார்.[4] இவற்றை ஆய, இவர் பால்வெளியிடை ஊடகம், பால்வழி, மீப்பொருண்மைக் கருந்துளைகள் ஆகிய களங்களைப் பயன்படுத்துகிறார்.[4]
ஓகியோ அரசு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்ததும் இவர் அபுள் ஆய்வு மாணவராகவும் கார்னிகி பிரின்சுடன் ஆய்வு மாணவராகவும் இருந்தார்.[6] இவர் 2008 இல் கார்னிகி அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார்.[7] இவர் 2014 இல் ஒளியன் குறைவாக்க நெருக்க்டி குறித்து அற்வித்தார் இந்நெருக்கடி மின்னணுவாக்க நீரக வளிம்ம், பால்வெளியிடை ஊடக நீரகம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒளியன் அளவுப் பற்றாக்குறையால் ஏற்படுவதாகும்.[8][9][10][11][12]
இவர் 2015 இல் உயராய்வு நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்தார்.[13] இப்போது இவர் கார்னிகி வான்காணகங்களின் ஆய்வாளராக உள்ளார்.[14] இங்கு இவர் அழைப்பின்பேரில் அடிக்கடி உரையாற்றுகிறார்.[5][15] இவர் சுலோவான் இலக்க்கவியல் வானளக்கைத் திட்டத்துக்கு தலைமையேற்பார் என அறிவிக்கப்பட்டது.[7][16]
இவர் "மதிநுட்பர்" என்ற பி. பி. எசு. ஆவணத்தில் தோன்றினார் "Genius".[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "juna kollmeier". SDSS. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.
- ↑ "Meet the Woman Who Wants to Solve the Universe’s Mysteries". http://www.nationalgeographic.com.au/people/meet-the-woman-who-wants-to-solve-the-universes-mysteries.aspx.
- ↑ 3.0 3.1 "Juna Kollmeier | Simons Foundation". www.simonsfoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
- ↑ 4.0 4.1 4.2 Science, Carnegie. "Juna Kollmeier | Carnegie Institution for Science". carnegiescience.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
- ↑ 5.0 5.1 Carnegie Science (2015-06-05), At the Edge of Reason: The Black Holes in the Universe, பார்க்கப்பட்ட நாள் 2018-04-20
- ↑ 6.0 6.1 "Juna Kollmeier | Meet the Experts | Genius by Stephen Hawking". Juna Kollmeier | Meet the Experts | Genius by Stephen Hawking. பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
- ↑ 7.0 7.1 "Juna Kollmeier | The Kavli Institute for Astronomy and Astrophysics at Peking University (KIAA-PKU)". kiaa.pku.edu.cn (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-21. பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
- ↑ Kollmeier, Juna A.; Weinberg, David H.; Oppenheimer, Benjamin D.; Haardt, Francesco; Katz, Neal; Davé, Romeel A.; Fardal, Mark; Madau, Piero et al. (2014-06-25). "The Photon Underproduction Crisis". The Astrophysical Journal 789 (2): L32. doi:10.1088/2041-8205/789/2/L32. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-8205. Bibcode: 2014ApJ...789L..32K.
- ↑ Rodgers, Paul. "An Intergalactic Light That Shines Too Bright" (in en). Forbes. https://www.forbes.com/sites/paulrodgers/2014/07/11/an-intergalactic-light-that-shines-too-bright/#32ad63d95b8c.
- ↑ "Strange dark stuff is making the universe too bright" (in en-US). New Scientist. https://www.newscientist.com/article/mg22329782-700-strange-dark-stuff-is-making-the-universe-too-bright/.
- ↑ "Cosmic accounting reveals missing light crisis". https://phys.org/news/2014-07-cosmic-accounting-reveals-crisis.html.
- ↑ redOrbit (2017-09-15). "Researcher puts his own body on the line to test eel’s shock power - Redorbit" (in en-US). Redorbit. http://www.redorbit.com/news/science/1113418734/researcher-puts-his-own-body-on-the-line-to-test-eels-shock-power/.
- ↑ "Juna Kollmeier" (in en). Institute for Advanced Study. https://www.ias.edu/scholars/juna-kollmeier.
- ↑ "The Carnegie Observatories". obs.carnegiescience.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
- ↑ AstronomyHeidelberg (2015-11-03), Juna Kollmeier: The Nature of the IGM and the Photon Underproduction Crisis, பார்க்கப்பட்ட நாள் 2018-04-20
- ↑ "Astrophysical Research Consortium". sloan.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.