யூரியா பெர்குளோரேட்டு
ஒரு பல்படிகத் திண்மம்
யூரியா பெர்குளோரேட்டு (Urea perchlorate) என்பது (CO(NH2)2•HClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். நல்ல நிலைப்புத்தன்மையும் நீருறிஞ்சும் தன்மையும் மிகுந்த இச்சேர்மம் தகடு வடிவத்தில் பல்படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. நீருக்கு அடியில் வெடிக்கும் பொருட்கள் உட்பட [1] திரவ வெடிபொருள்களில் [2] ஆக்சிகரணியாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.
இனங்காட்டிகள் | |
---|---|
18727-07-6 | |
ChemSpider | 23078714 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CO(NH2)2•HClO4 | |
வாய்ப்பாட்டு எடை | 159.51 கி/மோல் |
தோற்றம் | படிகங்கள் |
உருகுநிலை | 83 °C (181 °F; 356 K) |
நீரில் நன்கு கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுயூரியாவை படிப்படியாக பெர்குளோரிக் அமிலக் கரைசலில் சேர்ப்பதால் யூரியா பெர்குளோரேட்டு உருவாகிறது.
- CO(NH2)2 + HClO4 → CO(NH2)2•HClO4
யூரியாவை ஐதரோ குளோரிக் அமிலத்துடன் சேர்த்து பின்னர் சோடியம் பெர்குளோரேட்டு சேர்த்து உப்பை வடிகட்டிக் கொள்ளும் முறை மாற்று தயாரிப்பு முறையும் பின்பற்றப்படுகிறது.
- NaClO4•H2O + CO(NH2)2 + HCl → CO(NH2)2•HClO4 + NaCl + H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ A US3952655 A, Masao Kusakabe, Shuzo Fuziwara, Kazuo Shiino, "Underwater blasting method and explosives and devices used therein", published 27 Apr 1976
- ↑ Liu, Jiping (2015). Liquid Explosives. Springer. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662458464.