யூரியேசு
யூரியேசு (Urease) என்பது யூரியாவை நீராற்பகுக்கும் ஒரு நொதி. இது யூரியாவை கரியமில வாயுவாகவும் அம்மோனியாவாகவும் மாற்றுகிறது.
பல நுண்ணுயிர்கள் யூரியேசு நொதியைச் சுரக்க வல்லவை. அவற்றுள் எச். பைலோரி குறிப்பிடத்தக்கது. இது அதிக அளவு யூரியேஸ் நொதியைச் சுரக்கிறது. இதனால் இரைப்பையின் அமிலத்தன்மை போவதுடன் அம்மோனியாவால் புண் உண்டாகிறது.