யூரி ஒகனேசியான்

(யூரி ஒகானேசியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யூரி த்சொலொக்கோவிச் ஒகனேசியான் (Yuri Tsolakovich Oganessian, உருசியம்: Юрий Цолакович Оганесян, பிறப்பு: 14 ஏப்ரல் 1933) என்பவர் ஆர்மீனிய வம்சாவழியைச் சேர்ந்த உருசிய அணுக்கரு இயற்பியலாளர் ஆவார். இவரும், இவரது அணியைச் சேர்ந்தவர்களும் இணைந்து தனிம அட்டவணையில் உள்ள மிகக்கனமான உலோகங்களைக் கண்டறிந்தனர்.[1][2]

யூரி ஒகனேசியான்
Yuri Oganessian
யூரி ஒகனேசியான்
பிறப்புஏப்ரல் 14, 1933 (1933-04-14) (அகவை 91)
ரசுத்தோவ், சோவியத் ஒன்றியம்
குடியுரிமைஉருசியர்
தேசியம்ஆர்மீனியர்
துறைஅணுக்கருவியல்
பணியிடங்கள்பிளெரோவ் ஆய்வுகூடம்
கல்வி கற்ற இடங்கள்மாசுக்கோ பொறியியல் இயற்பியல் கல்விக்கழகம்
அறியப்படுவதுதனிம அட்டவணையில் உள்ள கன உலோகங்களின் இணைக் கண்டுபிடிப்பாளர்

ஓகனேசியான் உருசியாவின் ரசுத்தோவ் நகரில் பிறந்தவர். தூப்னா நகரில் உள்ள பிளெரோவ் அணுக்கருத்தாக்க ஆய்வுகூடத்தில் அறிவியல் தலைவராகப் பணியாற்றினார்.[3]

அமெரிக்க அறிவியலாளர்கள் ஒகனேசியான் குழுவினரின் கண்டுபிடிப்பான பிளெரோவியத்தை அது கண்டுபிடிக்கப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டில் அங்கீகரித்தனர்.[4] மேலும், புதிய தனிமங்களைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்யும் மாபெரும் அறிவியலாளராக இவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://cerncourier.com/cws/article/cern/28416
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.
  4. "Element 114 confirmed". வேதியியலுக்கான வேந்திய சங்கம். 30 September 2009. பார்க்கப்பட்ட நாள் 19 November 2011.

வெளி இணைப்புகள்

தொகு

Yuri Oganessian biography பரணிடப்பட்டது 2016-06-12 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரி_ஒகனேசியான்&oldid=3569328" இலிருந்து மீள்விக்கப்பட்டது