யூலியா எம். இரிலே
யூலியா எம். இரிலே (Julia M. Riley) (கில் எனப்படுபவர்) ஒரு பிரித்தானிய வானியற்பியலாளர் ஆவார்
குடும்பம், தொழில் பின்னணி
தொகுஇவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவண்டிழ்சு வானியற்பியல் குழு சார்ந்த கிர்ட்டன் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் ஆய்வுப்புலம் கதிர்வானியல் ஆகும். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் முப்பாடத் திட்டத்தின்கீழ் இயற்பியலில் விரிவுரையாற்றுகிறார். இயற்பியல் ஆய்வகப் பயிற்றுநராகவும் விளங்குகிறார். இவர் பிரித்தானிய கடல்சார் புவியியற்பியலாளராகிய மவுரிசு கில்லின் மகளும் நோபல் பரிசு வென்ற உடலியலாளராகிய ஆர்ச்பால்டு விவியான் கில்லின் பேத்தியும் ஆவார்.
பார்னராப் இரிலே (FR) வகைமை I, II
தொகுஇவர் 1974 இல் பெர்னி பர்னராப்புடன் இணைந்து கதிர்ப்பால்வெளிகளின் வகைப்பாடு குறித்த சிறந்த ஆய்வுரையை எழுதியுள்ளார். அதில் கதிர்ப்பால்வெளிகளை அவற்றின் வடிவத்தைப் பொறுத்து இரண்டாகப் பிரித்தார். இவ்வகைபாடு கதிர்ப்பால்வெளிகளின் பார்னராப்-இரிலே வகைபாடு வகைமை I, II என அழைக்கப்படுகிறது. அதாவதுFRI, FRII என அழைக்கப்படுகிறது. FRI பால்வெளிகளில் பெரும்பகுதி கதிர் உமிழ்வு அவற்றின் மையத்தில் இருந்து வருகிறது. ஆனால், FRII பால்வெளிகளில் பெரும்பகுதி கதிர் உமிழ்வு மையத்தில் இருந்து விலகி அமையும் வெம்புள்ளிகளில் இருந்து வருகிறது.