யெதிதா அய்சுலர்

யெதிதா சி. அய்சுலர் (Jedidah C. Isler) ஓர் அமெரிக்க வானியற்பியலாளாரும் கல்வியாளரும் அறிவியல்,தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் புலங்களில் பன்மையைப் பாராட்டி வளர்த்தவரும் ஆவார். இவர் பொலிவு வீசிகள் எனப்படும் உயர்செயல் முனைவு மீப்பொருண்மை கருந்துளைகளைப் பற்றியும்.[1] அவற்றில் இருந்து வெளியேறும் தாரைகளைப் பற்றியும் ஆய்வு செய்தார்.[2] இவர் தார்த்மவுத் கல்லூரியில் வானியற்பியல் உதவிப் பேராசிரியராக இப்போது உள்ளார்.[3] இவர் வானியற்பியலில் தன் முனைவர் பட்டத்தை 2014 இல் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றது இவரே எனலாம்.[2]

யெதிதா சி. அய்சுலர்
Jedidah C. Isler

முனைவர்
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
துறைவானியற்பியல்
பணியிடங்கள்வாண்டர் பில்ட் பல்கலைக்கழகம், சிராக்கியூசு பல்கலைக்கழகம், தார்த்மவுத் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்நார்போக் மாநிலப் பல்கலைக்கழகம் (அறிவியல் இளவல்), பிசுக் பல்கலைக்கழகம் ( கலை முதுவர்). யேல் பல்கலைக்கழகம், (அறிவியல் முதுவர்), (முனைவர்)
ஆய்வேடுஉள்ளே ஆடு, வெளியே சிங்கம்: பெர்மி காம்மாக்கதிர் பொலிவு வீசிகளில் வட்டுத் தாரை இணைப்பு ஆய்வு
அறியப்படுவதுயேல் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி
விருதுகள்காவ்லி அறக்கட்டளை ஆய்வுறுப்பினர் (2016), போர்டு அறக்கட்டளை ஆய்வுரை ஆய்வுறுப்பினர் (2012), தேசிய அறிவியல் அறக்கட்டளை (2007)
இணையதளம்
jedidahislerphd.com

இவர் 2020 நவம்பர் மாத்த்தில் நாசாவின் பதவிமாற்றக் கால விளைவுகளை சந்திக்க, இவர் குடியரசுத் தலைவர் பிதேனின் குடியரசு தலைவர் பதவிமாற்றக் கால முகமையின் மீள்பார்வைக் குழுவின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[4]

இளமையும் கல்வியும் தொகு

அய்சுலர் நியூயார்க் நயாகரா அருவியிலும் பின்னர் வர்ஜீனியா கடற்கரையிலும் வளர்ந்தார்[5][6] இவருக்கொரு அக்கா உண்டு.[1] ஓராண்டு இவரது பிறந்த நாளுக்கு அந்த அக்கா தொலைநோக்கியொன்றைப் பரிசளித்துள்ளார். இதைக் கொண்டு இவர் விண்மீன்களை நோட்டமிடலானார்.[7] இவருக்கு தன் 12 ஆம் அகவையிலேயே வானியல் பித்து பிடித்துவிட்டது. எனவே இவர் அறிவியலில் தொழில்முறைக் கல்வி கற்கலானார்.[8] இவர் கல்லூரி படிப்பைத் தொடங்கியபோது இவரது தந்த குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லவே ஏற்பட்ட நிதி நெருக்கடி படிப்பை இடைநிறுத்தவேண்டிய அச்சுறுத்தலை உருவாக்கியது.[1]

வேனிட்டி ஃபேருக்கான ஒரு நேர்காணலில் தன் முன்காட்டு பாத்திரங்களாகத் தன் தாயாரும் மாயே எமிசனும் பெத் பிரவுனும் அமைந்தமையைக் குறிப்பிடுகிறார்.[9]

தான் படிக்கும் நிறுவனத்தில் வானியல் படிப்பு இல்லாததால், இயற்பியல் படிக்க முடிவெடுத்தார். இவர் படிக்கும்போது வானியலில் பல பயிற்சி வாய்ப்புகளும் கோடைக்கால ஆராய்ச்சித் திட்டங்களும் கிடைத்துள்ளன.[7] இவர் நார்போக் மாநில பல்கலைக்கழகத் தோசோரெட்சு தேசியக் கணிதைவியல், பயன்முறை அறிவியல் நிறுவனத்தின் சிறுபான்மையினர் பட்டப்படிப்பு மேம்பாட்டுத் திட்ட்த்தில் உயர்தகைமையுடன் அறிவியலில் இளவல் பட்டம் பெற்றார்.[5]

அறிவியல் இளவல் பட்டம் பெற்றதும் பிசுக் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் கெய்வன் சுட்டாசுன் மேற்பார்வையில் முதுகலைப் பட்டம் பெறச் சேர்ந்து படித்தார். பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் மூதறிவியல் பட்டம் பெறச் சேர்ந்துள்ளார்.முதுவரில் இருந்து முனைவர் பட்டம்பெற வாய்ப்புதரும் வாண்டர் பில்ட் திட்டத்தின்கீழ் இவர் மூவரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் புலங்களில் பெண்கலுக்கும் சிறுபான்மையினருக்கும் கூடுதல் வாய்ப்பு நல்க வடிவமைக்கபட்ட திட்டமாகும்.[10] வழக்கமாக இத்திட்ட்த்தில் பிசுக் பல்கலைக்கழகத்தில் முதுவர் பட்டம் பெற்றவ வாண்டர் பில்டில் முனைவர் பட்டம் பெறுவர். ஆனால் இவர் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற முடிவெடுத்துள்ளார்.

இவர் 2014 இல்[11] தன் முனைவர் பட்டத்தை யேல் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இங்கே இவர் தன் முனைவர் பட்டத்துக்காக வானியற்பியலில் பொலிவு வீசிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். இவரே யேல் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார்.[8][12][13] தனது தேசிய ஆராய்ச்சி திட்ட நேர்காணலில் முதல் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் இவரது வகுப்பு வெள்ளையின ஆண் மாணவர் ஒருவர் நடத்தையை நினைவுகூர்ந்துள்ளார். "எங்கெங்கும் தட்டுகள் சிதறிக் கிடந்தன" மேலும் இவர் நினைவுகூர்கிறார். " திடீரென வகுப்பு மாண்வர் (வெள்ளையின வகுப்பு மாணவர்) வந்து அழுக்கான தட்டுக் குவியலைத் தந்துவிட்டுக் கூறியுள்ளார், ' இங்கே போய் நீ செய்யவேண்டியதை செய். அது தான் உன் வேலை.'"[10] இவர் 2014 இல் தன் முனைவர் ஆய்வுரையை வெளியிட்டார்,இதன் தலைப்பு உள்ளே ஆடு, வெளியே சிங்கம்: பெர்மி காம்மாக்கதிர் பொலிவு வீசிகளில் வட்டுத் தாரை இணைப்பு ஆய்வு என்பதாகும்,[14] இதற்கு அமெரிக்க வானியல் கழகம் உரோஜர் டாக்சே ஆய்வுரை பரிசை வழங்கியது.[15]

கல்விப்பணி தொகு

 
இரண்டாம் வெள்ளை மாளிகை வானியல் இரவில் யெதிதா அய்சுலர், தொன்மத் தகர்ப்பாளர், ஓம்புநர்: ஆடம் சாவேஜ், யாமீ கீன்மன், நாசா ஆட்சியலுவலர் சார்லசு போல்டேன் ஆகியோருடன். திங்கட்கிழமை, அக்தோபர், 19, 2015.

இவருக்கு 2019 இல் தொழில்முறைத் திறமைகளுக்காகவும் சமூகவியல் வளர்ச்சிப் பணிகளுக்காகவும் 2020 ஆம் ஆண்டின் வானியல், வானியற்பியல் பத்தாண்டு அளக்கை பேரவையில் உறுப்பினர் தகைமை வழங்கப்பட்டது.[16]

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித்வியல் புலங்களைப் பரப்புதலும் தொடர்பாடலும் தொகு

  வெளி ஒளிதங்கள்
  "நான் எப்படிதுடிப்பண்டங்களிலும் பொலிவு வீசிகளிலும் புடவியிலும் காதல் கொண்டேன்", TED உரை, March 2015
  வெளி ஒளிதங்கள்
  "அறிவியலை ந்ன்றாக மாற்றவல்லபயன்கொள்ளாத மதிநுட்பர்", TED உரை, August 2015

தகைமைகளும் விருதுகளும் தொகு

  • முதுநிலை TED ஆய்வுறுப்பினர், 2017[17]
  • அரிய தாக்கம் செலுத்திய நூறு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், 2016[18]
  • தேசிய புவிப்பரப்புத் தேட்ட எழுதகவாளர், 2016[19][20]
  • அறிவியல் முன்னணிக் கருத்தரங்கு காவ்லி ஆய்வுறுப்பினர், நவம்பர், 2015[21]
  • காட்டாளர், ஓம்புநர், TED கருத்தரங்கு, பிப்ரவரி, 2016
  • Host TED@IBM, அக்தோபர் 2015
  • TED ஆய்வுறுப்பினர், 2015[22]
  • அமெரிக்க வானியல் கழக உரோஜர் ஆய்வுரைக்கான ஆய்வுநல்கை பரிசு, ஜனவரி, 2014
  • போர்டு அறக்கட்டளை ஆய்வுரைக்கான ஆய்வுநல்கை, ஆகத்து 2012[23]
  • எடுவார்டுபவுக்கெட் பட்ட்த் தகைமைக் கழகம், மார்ச்சு 2012
  • தேசிய அறிவியல் அறக்கட்டளை பட்ட ஆராய்ச்சி ஆய்வ்ய்நல்கை, ஜூன் 2007[24]
  • நாசாவின் ஆரியேத் ஜி. ஜென்கின்சு முந்துமுனைவர் ஆய்வுநல்கை, ஜூன், 2007

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Mayol, Taylor (2016-09-09). "The Astrophysicist at the Cutting Edge of Black Holes". Archived from the original on 2016-10-03. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  2. 2.0 2.1 "Jedidah Isler First African-American Woman To Receive A Yale PhD In Astrophysics". Science World Report. 2015-10-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  3. "Jedidah C. Isler | Department of Physics and Astronomy". physics.dartmouth.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  4. "Agency Review Teams". President-Elect Joe Biden. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  5. 5.0 5.1 Cook Jenkins, Elizabeth (2016-05-09). "Rising Star". vanderbilt.edu. Vanderbilt University. Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-02.
  6. poc2, Author (2019-01-31). "Dr. Jedidah Isler – Astrophysicist". POC Squared (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-13. {{cite web}}: |first= has generic name (help)CS1 maint: numeric names: authors list (link)
  7. 7.0 7.1 "Getting to Know: Astrophysicist Jedidah Isler". SU News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
  8. 8.0 8.1 "Meet Dr Jedidah Isler: The First Black Woman to Graduate from Yale with a PhD in Astrophysics" (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-09-25. Archived from the original on 2016-09-06. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  9. "Saluting a New Guard of S.T.E.M. Stars". Vanity Fair (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.
  10. 10.0 10.1 "A Graduate Program Works To Diversify The Science World". Code Switch. NPR. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  11. "Graduate Alumni | Department of Astronomy". astronomy.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
  12. "Lessons Learned". Vanderbilt Magazine. Vanderbilt University. May 12, 2016. பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
  13. "About". jedidahislerphd.com. Jedidah Isler. பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
  14. வார்ப்புரு:Cite dissertation
  15. "Rodger Doxsey Travel Prize". AAS.org (in ஆங்கிலம்). American Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.
  16. "Astro2020: Panel on State of the Profession and Societal Impacts". National Academies of Science, Engineering, and Medicine. பார்க்கப்பட்ட நாள் 10 December 2020.
  17. "Meet the 2017 class of TED Fellows and Senior Fellows". TED Blog (in ஆங்கிலம்). 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  18. "The Root 100 – 2016". The Root (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.
  19. Society, National Geographic. "Learn more about Jedidah Isler". www.nationalgeographic.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  20. "Four TED Fellows named 2016 National Geographic Emerging Explorers". TED Blog (in ஆங்கிலம்). 2016-05-23. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.
  21. "2015 Kavli Fellows - News Release". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
  22. "Meet the 2015 class of TED Fellows and Senior Fellows". TED Blog (in ஆங்கிலம்). 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  23. "Ford Foundation Fellowships Scholar Award List 2012". National Academies of Science, Engineering, and Medicine. பார்க்கப்பட்ட நாள் 10 December 2020.
  24. "NSF Graduate Research Fellowship Program Award Recipients, 2007 - Data.gov". catalog.data.gov. Archived from the original on 30 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 December 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யெதிதா_அய்சுலர்&oldid=3777821" இலிருந்து மீள்விக்கப்பட்டது