யோகி ஆரோன் (மருத்துவர்)
யோகி ஆரோன் (Yogi Aeron) (பிறப்பு 1937) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராவார். 2020 ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இவருக்கு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது. [1][2]
யோகி ஆரோன் | |
---|---|
தொழில் | மருத்துவர் |
மொழி | ஆங்கிலம், இந்தி |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
வாழ்க்கை
தொகுஆரோன் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் 1937 இல் பிறந்தார். இவர் கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அங்கு இவர் ஐந்தாவது முயற்சிக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டார். நான்கு ஆண்டு இளங்கலை படிப்பை முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனது. பின்னர், 1971 இல் பீகாரின் பாட்னாவில் உள்ள பிரின்சு ஆப் வேல்சு மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தார். 1973 ஆம் ஆண்டில், தேராதூனிலுள்ள ஒரு மாவட்ட மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றத் தொடங்கினார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் மேலும் நிபுணத்துவம் பெறுவதற்காக 1982 இல் அமெரிக்கா சென்றார். 1983 ஆம் ஆண்டில், இவர் நான்கு ஏக்கர் வளாகத்தை வாங்கினார். இது வறியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், குழந்தைகளுக்கான கற்றல் மையமாகவும் செயல்படுகிறது. இவர் 1985 முதல் தீயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் பணியாற்றியதற்காக இவருக்கு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது. இவர் உத்தராகண்டம் மாநிலத்தின் தேராதூனிலுள்ள மல்சியில் வசிக்கிறார். [1][2][3][4][5]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Meet Padma Shri recipient Yogi Aeron, Himalayan doctor who treats burn patients for free". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
- ↑ 2.0 2.1 Bhargava, Anjuli (2017-09-08). "Meet Yogi Aeron, the Himalayan plastic surgeon". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/the-yogi-of-malsi-117090600325_1.html.
- ↑ Banerjee, Disha (2020-01-27). "82 YO Doctor Becomes Padma Shri Recipient For Treating Burn Patients For Free For 25 Years". Storypick (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
- ↑ "This Padma Shree Recipient Has Been Treating Burn Patients for Free for 27 Years". News18. 2020-01-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
- ↑ World, Republic. "Meet Padma Shri awardee Yogi Aeron, a doctor who has been treating burn patients for free". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.