யோகி ஆரோன் (யோகா ஆசிரியர்)
யோகி ஆரோன் (Yogi Aaron) கனடிய யோகா ஆசிரியரும் "நிர்வாண யோகியின் சுயசரிதை" என்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார். ஆரோன் நியூயார்க் நகரில் நிர்வாண யோகா இயக்கத்தை நிறுவினார். இது கூட்டாளர் மற்றும் தாந்த்ரீக யோகா ஆகிய இரண்டின் கூறுகளையும் உள்ளடக்கியது. மேலும் நிர்வாணமாக இருக்கும்போது நிகழ்த்தப்படுகிறது. [1]
யோகி ஆரோன் | |
---|---|
பிறப்பு | 1972 |
தேசியம் | கனடா நாட்டு குடிமகன் |
மற்ற பெயர்கள் | ஆரோன் ஸ்டார் |
பணி | யோகா ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 - 2016 |
அறியப்படுவது | சூடான நிர்வாண யோகா, புளூ ஓசா |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | "நிர்வாண யோகியின் சுயசரிதை" |
ஆரம்பகால வாழ்க்கையும் தொழிலும்
தொகு18 வயதில், இவர் வான்கூவர் சமூக மையத்தில் வேலை செய்யத் தொடங்கினார். வடிவத்தை அழகாக வைத்திருப்பது வாழ்நாள் முழுவதும் பொறுப்பு என்பதை உணர்ந்த இவர் 1991 இல் யோகா மாணவராகவும் 1997 இல் ஆசிரியராகவும் ஆனார். பிரையன் கெஸ்ட், இராட் ஸ்ட்ரைக்கர், சுவாமி இராமா உள்ளிட்ட யோகா ஆசிரியர்களுடனும், இமயமலையில் உள்ள பிற ஆன்மீக குருக்களின் பல யோகா ஆசிரமங்கள் உட்பட உலகம் முழுவதும் பயணம் செய்து பார்வையிட்டார். [2]
இவர், 2001 இல் மன்ஹாட்டனுக்கு வந்தார். குறுகிய காலத்திற்குள் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றார். ஹவாயில் ஒரு பயிற்சியின் போது தான், இவரும் இவரது நீண்டகால மாணவரான ஆதாமும் முதலில் "யோகாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவது பற்றி விவாதித்தனர். மேலும் இதன்மூலம் "மக்கள் தங்கள் ஆன்மாவை குணப்படுத்த முடியும்." என்பதை நம்பினர். [3] ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்கள் கோஸ்ட்டா ரிக்காவில் சொத்துக்களை வாங்கி புளூ ஓசா என்று அழைக்கப்படும் யோகா மையத்தைத் தொடங்கினார்கள். [4] [5]
நிர்வாண யோகா பயிற்சி செய்வதற்கான யோசனையை ஆரோன் பிரபலப்படுத்தினார். இது நியூயார்க்கின் ஓரின சேர்க்கை சமூகத்தில் ஆண்களைப் பின்தொடர்ந்தது. [6] அதன் பின்னர் இது சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் பாஸ்டனில் பரவியது. நியூயார்க்கின் செல்சியாவில் 2001 ஆம் ஆண்டில் 23 வது தெரு மற்றும் ஆறாவது அவென்யூவின் தென்மேற்கு மூலையில் உள்ள கட்டிடத்தில் நிர்வாண யோகா இயக்கத்தைத் தொடங்கினார். [7]
ஆரோன் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார். பொதுவாக தன்சுதந்திரம் பற்றியும் தன்னுடன் பிறர் எப்படி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதையும் பற்றி பேசுகிறார். வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவது பற்றி பொதுவான தலைப்பில் பேசவும் எழுதவும் செய்கிறார். [8] [9]
நிர்வாண யோகியின் சுயசரிதை
தொகுஆரோன் 2015 இல் ஒரு நிர்வாண யோகியின் சுயசரிதை என்ற நூலை எழுதினார். அதில், 70களின் பிரிட்டிசு கொலம்பியா, கனடா ஆகியவற்றில் தனது குழந்தைப் பருவம் பற்றியும், ஒரு மிருகத்தனமான உறைவிடப் பள்ளிக் கல்வி தன்னை முற்றிலும் மாறுபட்ட பாதையில் எவ்வாறு அமைத்தன என்பதை இவர் விவரிக்கிறார். இருப்பினும், உறுதியுடனும், வெளிப்புறங்களில் ஒரு அன்புடனும் ஊக்கமுடனும் காணப்படும் இவர், இயற்கை காட்சிகளில் தன்னைப் புரிந்துகொள்ள முயன்றதாக கூறுகிறார். [10] [11] புத்தகத்தை விமர்சனம் செய்த பிராட்வே வேர்ல்ட் என்பார், "யோகி ஆரோனின் கதை அதிகாரமளிப்பதில் ஒன்றாகும். இது சாகச உணர்வைக் கொண்டுள்ளது." என்றார்.[12]
விமர்சனம்
தொகுஆரோரின் நிர்வாண யோகா வகுப்புகள் அதன் உயர்ந்த சிற்றின்பத்திற்காக விமர்சனங்களைப் பெற்றன. நவீன உலகில் யோகா: தற்கால பார்வைகள் "சூடான நிர்வாண யோகாவை" சுவாமி சிவானந்தா போன்றவர்களை அவதூறாகப் பேசும் "பாலியல் வெளிப்பாட்டின் ஊக்குவிப்பு"என்று அழைக்கிறது. [13] ஸ்டீவர்ட் ஜே லாரன்ஸ் என்பவர் தி கார்டியனில் "ஆபாசம்" என்றும் இதை வரையறுத்தார் . [14] யோகா வகுப்பில் கலந்து கொண்ட அவுட் இதழின் ஆசிரியர் ஜோசுவா ஸ்டீன், "உயர்ந்த சிற்றின்பத்தால்" யோகாவின் தரம் குறைந்துவிட்டது என்று எழுதினார் [15] அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கையின் படி, நிர்வாண யோகா நிர்வாணமாக பயிற்சி பெற்ற தாந்த்ரீக யோகாவின் ஒரு வடிவமாகத் தெரிகிறது" என்கிறது. [16]
குறிப்புகள்
தொகு- ↑ "Yoga Industry May Have Found a Few Good Men".
- ↑ "One-Month Immersion Yoga Teacher Training".
- ↑ "About Yogi Aaron".
- ↑ "Confessions Of A Naked Yogi".
- ↑ "Hot Nude Yoga Draws Fire".
- ↑ "History Of Yoga".
- ↑ "Hot Naked Yoga Class".
- ↑ "Yogi Aaron Blog".
- ↑ "Bad Yogi Blogs".
- ↑ "Blue Osa Yogi Aaron".
- ↑ "Founder of Costa Rica Retreat Writes About Naked Yoga".
- ↑ "Yogi Aaron Shares the AUTOBIOGRAPHY OF A NAKED YOGI".
- ↑ "Yoga in the Modern World: Contemporary Perspectives".
- ↑ "The Guardian Naked Yoga".
- ↑ "Hot Nude Yoga Isn't About Sex".
- ↑ "Hot Nude Yoga Becomes Gay Trend".