யோகேசு குமார் சாவ்லா
யோகேசு குமார் சாவ்லா (Yogesh Kumar Chawla) என்பவர் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் கல்லீரலியலில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். சண்டிகார் நகரிலுள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார்[1][2]. சபல்பூரிலுள்ள நேதாஜி சுபாசு சந்திரபோசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர் அதே கல்லுரியில் இரைப்பை நோய்களைப் பற்றிய ஆய்வுப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றார்[2]. 1983 ஆம் ஆண்டு சண்டிகார் நகரிலுள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்லீரல் இயல் துறையில் ஆசிரிய உறுப்பினராக இருந்த இவர் 1999 ஆம் ஆண்டு அத்துறையின் தலைவராக உயர்ந்தார்[1]. இதே ஆண்டு இந்தியாவில் மருத்துவ பிரிவுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் சாவ்லாவுக்கு வழங்கியது[1]. தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் கௌரவ உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது[4].
யோகேசு குமார் சாவ்லா Yogesh Kumar Chawla | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | கல்லீரல் நிபுணர் |
விருதுகள் | பத்மசிறீ பிதான் சந்திரா ராய் விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "India Medical Times". India Medical Times. 15 October 2011. Archived from the original on 20 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் February 20, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Day and Night News". Day and Night News. 2015. Archived from the original on பிப்ரவரி 20, 2015. பார்க்கப்பட்ட நாள் February 20, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் March 19, 2016.
- ↑ "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on ஜனவரி 26, 2015. பார்க்கப்பட்ட நாள் February 16, 2015.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)CS1 maint: unfit URL (link)