யோக்யா கெம்பாலி நினைவுச்சின்னம், யோக்யகர்த்தா

இந்தோனேசியாவில் உள்ள ஒரு நினைவுச்சின்னம்

யோக்யா கெம்பாலி நினைவுச்சின்னம் (Yogya Kembali Monument) (யோகியாகர்த்தாவை மீண்டும் கைப்பற்றியதற்கான ஓர் நினைவுச் சின்னம்), என்பது Monjali என்றும் வழக்கில் அழைக்கப்பட்டு வருகிற ஓர் அருங்காட்சியகம் ஆகும்.[1]

யோக்யா கெம்பாலி நினைவுச்சின்னம், யோக்யகர்த்தா

அமைவிடம்

தொகு

இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவின் சிறப்பு பகுதியான நகாக்லிக் துணை மாவட்டத்தில் உள்ள ஸ்லேமான் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பிரமிடு வடிவத்தில் உள்ள இந்த நினைவுச்சின்னம் இந்தோனேஷியன் தேசிய புரட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் ஆகும்.[2] இந்த நினைவுச் சின்னமானது யோக்யகத்த்தாவில் அமைந்துள்ள மிகவும் பழமையானதாகவும், சிறப்புமிக்கதாகவும் கருதப்படுகின்ற இடமாகும். இந்தோனேசியாவில் இதனைப் போலவே பல வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் மற்றொரு பெயர் மோஞ்சலி நினைவுச்சின்னம் என்பதாகும்.[3]

அமைப்பு

தொகு

இந்த நினைவுச்சின்னம் ஒரு பிரமிட்டின் வடிவத்தைக் கொண்டு அமைந்துள்ளது. இது மூன்று நிலைகளைக் கொண்டு காணப்படுகிறது. முதல் நிலையில் ஒரு நூலகம், அருங்காட்சியகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் ஆடிட்டோரியம் ஆகியவவை அமைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் அடுத்து அமைந்துள்ள இரண்டாவது நிலையை அடைந்ததும், பல டியோராமாக்களைக் காண வசதி உள்ளது. யோககர்த்தா நகரத்தில் (1948 - 1949 ஆம் ஆண்டுகளில்) டச்சுக்காரர்களுக்கு எதிரான போர்களைப் பற்றிய கதைகளை அந்த டியோராமக்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம். சுற்றுலாப்பயணிகள் கடந்த காலங்களில் காணப்பட்ட வரலாற்றைக் கொண்டவற்றை இங்கு காண முடியும். இந்த அருங்காட்சியகம் மொத்தம் 5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டு அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளிப்புறம் மற்றும் உட்புறம் உட்பட அனைத்துப் பொறுமையுடன் காணமுடியும். நினைவுச்சின்னத்தை பார்க்க வருகின்ற பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மூன்றாவது நிலையில், சுற்றுலாப் பயணிகள் போராட்டத்தின்போது இன்னுயிரை ஈந்த வீரர்களை வணங்குவதற்கான இடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் கருவறை என்று கூறுகின்றனர்.அருங்காட்சியகத்தின் வெளிப்புறம் இன்னும் சிறப்பாக உள்ளது. அங்கே ஒரு பரந்த முற்றமும் மேடையும் காணப்படுகின்றன. பார்வையாளர்கள் அங்குள்ள சில அழகான விளக்குகள் விதம் விதமாக அழகினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.[4]

கலைப்பொருள்கள்

தொகு

இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளவற்றில் புரட்சியின் முக்கிய தருணங்களை வெளிப்படுத்துகின்ற 10 டியோராமாக்கள், காலனித்துவ காலம் மற்றும் புரட்சிக் காலத்தைச் சேர்ந்த கலைப் பொருள்கள் போன்றவை அடங்கும். 1948 டிசம்பர் 19 ஆம் நாள் முதல் 1949 ஜூன் 29 ஆம் நாள் வரை கொல்லப்பட்ட 420 புரட்சியாளர்களின் பட்டியல் இங்கு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு அமைதியான நினைவு அறை இங்கு உள்ளது.[5] நினைவுச் சின்னத்தைப் பார்த்துக்கொண்டு வரும்போது, ​​சுற்றுலாப் பயணிகள் அங்கு காட்சியில் வைக்கப்படுள்ள ஆயுதங்கள், தொலைபேசிகள், பழைய தட்டச்சு இயந்திரங்கள், மாதிரிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உன்னதமான மற்றும் வரலாற்று பொருட்களையும் காண முடியும்.[4]

சிறப்பு

தொகு

இந்த அருங்காட்சியகம் பலவிதமான வரலாற்று நிகழ்வுகளும், கதைகளும் ஆவணப்படுத்தப்பட்டு, காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கின்ற இடமாக இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற தமன் லாம்பியன் எனப்படுகின்ற விளக்குகளைக் கொண்ட காட்சி வசதி [4] உள்ளது. இரவு நேரத்தில் அதனைப் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும். ஆதலால் இது விடுமுறை நாளின் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர்களைப் பற்றிய வரலாற்றைக் கற்றுக்கொள்வதே யோக்யா கெம்பாலி நினைவுச்சின்னத்தைப் பார்வையிடுவதற்கான பொதுவான காரணம் அமையும். நாட்டின் சுதந்திரத்தைப் பேணி அதனைத் தக்க வைத்துக் கொள்வதே இதன் நோக்கமாகும். அதற்கான உதவிக்குறிப்பாக இது அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் வழிகாட்டியுடன் நினைவுச்சின்னத்தை சுற்றி வரும்போது பல புதிய செய்திகளை அறிந்தகொள்ள முடியும். தகவல்களை அனைவரும் பெறவேண்டும் என்ற வகையில் அந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த முறையில் கட்டடத்தைப் பற்றிய அனைத்துக் கூறுகளையும் இதன்மூலமாக அறியலாம். அதிகமான நேரத்தைச் செலவழிக்காமல் சுற்றுலாப் பயணிகள் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இங்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.[6]

இனிமையான மாலை

தொகு

பின்னர், இரவில், சுற்றுலாப் பயணிகள் யோக்யா கெம்பாலி நினைவுச்சின்னத்தின் முற்றத்தில் ஒரு இனிமையான மாலை நேரத்தை செலவிடலாம். பல்வேறு வடிவத்தில் அமைந்துள்ள வண்ணமயமான விளக்குகள் அங்கு செல்வோர் அனைவரையும் வரவேற்கின்றன. பல உணவு வகைகளை விற்பனை செய்கின்ற கடைகள் அப்பகுதியில் உள்ளன. அருங்காட்சியகத்தைக் காண வருகின்ற பார்வையாளர்கள் உணவினை உண்டுகொண்டும், பானங்களை குடித்துக் கொண்டும் அந்த அழகினை ரசிக்க முடியும். இசையோடு கூடிய கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்காக அங்கு நடத்தப்படுகின்றன.

குறிப்புகள்

தொகு
  1. Monjali being an acronym from the usage of Monumen Jogja Kembali a specific reference to the spelling in use at the time of the 1948-1949 events memorialised by this museum
  2. It was formally opened on 29 June 1985 - http://blog.re.or.id/sejarah-singkat-monumen-yogya-kembali.htm பரணிடப்பட்டது 2009-06-14 at the வந்தவழி இயந்திரம்
  3. Yogya Kembali Monument
  4. 4.0 4.1 4.2 Taman Lampion Images
  5. R. Syah. "Monumen Jogja Kembali (Monjali) - The Track of Six-Hours Occurrence in Yogyakarta". Yogyes.com. Retrieved 8 February 2011.
  6. Jogja Kembali Monument in Ngaglik Sub-District, Yogyakarta Special Region

வெளி இணைப்புகள்

தொகு