யோசுவா அங்கிரித்து
யோசுவா அங்கிரித்து (Joshua Angrist, ஜோசுவா அங்கிரிஸ்ட்; பிறப்பு: 18 செப்டம்பர் 1960)[1] அமெரிக்கப் பொருளியலாளரும், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகப் பொருளியல் பேராசிரியரும் ஆவார்.[2] அங்கிரீத்து, குவீதோ இம்பென்சு ஆகியோருக்கு "காரணத் தொடர்புகளின் பகுப்பாய்விற்கு அவர்களின் முறையான பங்களிப்புகளுக்காக" 2021-ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் பரிசு அரைப் பகுதி பங்கிட்டு வழங்கப்பட்டது. மீதம் தாவீது கார்டு என்பவருக்கு வழங்கப்பட்டது.[3]
பிறப்பு | செப்டம்பர் 18, 1960 கொலம்பஸ் (ஒகையோ), ஐக்கிய அமெரிக்கா | ||||||
---|---|---|---|---|---|---|---|
நிறுவனம் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் | ||||||
துறை | பொருளாதாரவியல், உழைப்பு (பொருளியல்) | ||||||
பயின்றகம் | ஓபர்லின் கல்லூரி (BA) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (MA, PhD) | ||||||
பங்களிப்புகள் | உள்ளூர் சராசரி சிகிச்சை விளைவு | ||||||
விருதுகள் | பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2021) | ||||||
| |||||||
ஆய்வுக் கட்டுரைகள் |
யோசுவா அங்கிரித்து தொழிலாளர் பொருளாதாரம்,[4] நகர்ப்புற பொருளாதாரம்,[5] கல்விப் பொருளாதாரம்,[6] ஆகியவற்றில் உலகின் தலைசிறந்த பொருளியல் வல்லுநர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் அமெரிக்காவில் மனித மூலதனம், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றில் ஆய்வு நடத்தும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் பள்ளிச் செயற்றிறன், சமத்துவமின்மை முன்முனைவு அமைப்பின் இணை-நிறுவனரும், இணைப் பணிப்பாளரும் ஆவார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Angrist, Joshua David - Full record view - Libraries Australia Search".
- ↑ "MIT Economics: Joshua Angrist". பார்க்கப்பட்ட நாள் 11 May 2011.
- ↑ Royal Swedish Academy of Sciences(October 11, 2021). "The Prize in Economic Sciences 2021". செய்திக் குறிப்பு.
- ↑ Joshua Angrist ranked 15th among 3037 authors registered in the field of labor economics on IDEAS/RePEc. Retrieved July 20th, 2019.
- ↑ Joshua Angrist ranked 4th among 3323 authors registered in the field of urban and real estate economics on IDEAS/RePEc. Retrieved July 20th, 2019.
- ↑ Joshua Angrist ranked 3rd among 1427 authors registered in the field of education on IDEAS/RePEc. Retrieved July 20th, 2019.
- ↑ "School Effectiveness & Inequality Initiative: Joshua Angrist". 11 May 2012.