யோசுவா (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யோசுவா (Joshua) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) ஆறாவது நூலாக இடம்பெறுவதாகும்.
நூலின் பெயர்
தொகுஇந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Sefer Y'hoshua" அதாவது "யோசுவாவின் நூல்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. முன்னைய இறைவாக்கினர் நூல்கள் என்னும் பிரிவில் முதலாவதாக இதை யூத மக்கள் கணிப்பர்.
நூலில் காணப்படும் கருத்துகள்
தொகுஇறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, மோசேக்குப் பின் இசுரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. இவர் கானான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல்.
இந்நூலில் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், யோர்தான் ஆற்றைக் கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
முன்பு மோசேயின் மூலம் இசுரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும்.
நூலின் பிரிவுகள்
தொகுபொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. கானான் நாட்டைக் கைப்பற்றல்
அ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல்
|
1:1 - 12:24
1:1-18
|
326 - 344
326 - 327
|
2. நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல்
அ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி
|
13:1 - 21:45
13:1-33
|
344 - 356
344 - 345
|
3. கிழக்கே குடியேறிய குலத்தார் | 22:1-34 | 356 - 358 |
4. யோசுவாவின் இறுதி மொழிகள் | 23:1-16 | 359 - 360 |
5. செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல் | 24:1-33 | 360 - 362 |