யோன் வில்லியம் டிரேப்பர் இல்லம்

யோன் வில்லியம் டிரேப்பர் இல்லம் (ஆங்கில மொழி: John William Draper House), என்றி டிரேப்பர் வானாய்வகம் (ஆங்கில மொழி: Henry Draper Observatory), டிரேப்பர் குடில் எனப் பலவாறாக அழைக்கப்படும் இது, நியூயார்க்கின் ஆசுட்டிங்சு-ஆன்-அட்சன் என்னுமிடத்தில் யூ.எசு 9 வழியில் அமைந்துள்ளது. 1837-1882 காலப்பகுதியில், என்றி டிரேப்பர் தனது தந்தையார் யோன் வில்லியம் டிரேப்பருக்குச் சொந்தமான இந்தக் கட்டிடத்தில் ஒரு வானாய்வகத்தை நிறுவினார்.[3] இவ்விடத்திலேயே அவர், தொலைநோக்கி மூலம், நிலவில் இனங்காணத்தக்க சிறப்புக்கூறுகளைக் காட்டும் தொடக்ககால ஒளிப்படங்களை 1863ல் எடுத்ததன் மூலம், வானொளிப்படவியல் வரலாற்றை உருவாக்கினார்.

என்றி டிரேப்பர் வானாய்வகம்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
ஐ.அ. தேசிய வரலாற்று அடையாளம்
2007ல் கட்டிடத்தின் முன்பக்கத் தோற்றம்.
அமைவிடம்: 407 புரோட்வே, ஆசுட்டிங்சு-ஆன்-அட்சன், நியூயார்க்]]
கட்டியது: 1840
நிர்வாக அமைப்பு: ஆசுட்டிங்சு வரலாற்றுக் கழகம்
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
மே 15, 1975[1]
வகை NHL: மே 15, 1975[2]
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
75001237

இவ்வில்லம் 1975ல் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[2][4] இது டிரேப்பர் குடும்பத்தின் பெயரால் அழைக்கப்படும் ஒரு பூங்காவின் நடுவில் அமைந்துள்ளது. இப்போது இது ஆசுட்டிங்சு வரலாற்றுக் கழகத்தின் அலுவலகமாகவும், உள்ளூர் வரலாற்று அருங்காட்சியகமாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2007-01-23.
  2. 2.0 2.1 "John W. Draper House". National Historic Landmark summary listing. National Park Service. 2007-09-15. Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-02.
  3. "John William Draper and the Hastings Observatory". Marion Martin. Hastings Historian: A Quarterly Publication of the Hastings Historical Society. 2007-09-05. Archived from the original on 2007-10-21. பார்க்கப்பட்ட நாள் 2016-04-02.
  4. James Sheire (1975) (pdf). [[[:வார்ப்புரு:NRHP url/core]] National Register of Historic Places Inventory-Nomination: John W. Draper House]. National Park Service. வார்ப்புரு:NRHP url/core.  and வார்ப்புரு:NRHP url/corePDF (509 KB)