யோவான் (நற்செய்தியாளர்)

நற்செய்தியாளரான புனித யோவான் (יוחנן எபிரேயம் Yoḥanan, பொருள் "யாவே இரக்கமுள்ளவர்", கிரேக்கம்: Εὐαγγελιστής Ἰωάννης) என்பவர் பாரம்பரியப்படி யோவான் நற்செய்தியின் ஆசிரியராவார். இவரே யோவான் எழுதிய மூன்று திருமுகங்களின் ஆசிரியராகவும் நம்பப்படுகின்றார். ஒருசாரார் திருவெளிப்பாட்டினை எழுதியவரும் இவரே என்கின்றனர்.[1] மேலும் யோவான் நற்செய்தியில் குறிக்கப்படும் இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர் இவரே என்கின்றது பாரம்பரியம்.[2] இயேசுவின் உருமாற்றம் உட்பட ஒரு சில சிறப்பான நிகழ்வுகளில் பங்கேற்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் அதிக ஆண்டுகள் வாழ்ந்து, அப்போசுதலர்களிலேயே இறுதியாக இறந்தார் எனச் சொல்லப்படுகிறது.

நற்செய்தியாளரான புனித
யோவான்
நற்செய்தியாளர், சீடர்
பிறப்புசுமார் கி.பி 15
யெரூசலம் (?)
இறப்புசுமார் கி.பி 100
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
திருவிழாடிசம்பர் 27 (மேற்கு கிறித்தவம்]]); மே 8 மற்றும் செப்டம்பர் 26 (இறப்பு) (கிழக்கு மரபுவழி திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைகழுகு, ஏட்டுச்சுருள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்யோவான் நற்செய்தி
1 யோவான் (நூல்)
2 யோவான் (நூல்)
3 யோவான் (நூல்)

மேற்கோள்கள்

தொகு
  1. Eusebius of Caesarea, Ecclesiastical History Book vi. Chapter xxv.
  2. Van den Biesen, Christian. "Apocalypse." The Catholic Encyclopedia. Vol. 1. New York: Robert Appleton Company, 1907. 6 Feb. 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவான்_(நற்செய்தியாளர்)&oldid=3539069" இலிருந்து மீள்விக்கப்பட்டது