யோ. பி. திரிவேதி

இந்திய அரசியல்வாதி

யோகேந்திர பிரேம்கிருஷ்ணா திரிவேதி (Y. P. Trivedi) என்பவர் இந்தியாவின் அரசியல்வாதியும் தேசியவாத காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[1]

யோ. பி. திரிவேதி
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
2008–2014
தொகுதிமகாராட்டிரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சனவரி 1929
சூரத்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
பிள்ளைகள்2 மகன்கள்

திரிவேதி நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் மகாராட்டிராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பு முடித்த இவர், இதன் பிறகு இளநிலை சட்டம் பட்டம் பெற்றார். சூரத்தில் பிறந்த இவர் தற்போது, தில்லியில் வசிக்கிறார். இவர் உலகம் முழுவதும் நீண்ட பயணம் செய்துள்ளார். இந்திய மட்டைப்பந்து குழுவின் தலைவராக இருந்த இவர் தற்போது உறுப்பினராக உள்ளார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார்.[2] ஜே. கே. விளையாட்டு அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார். இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் 2 ஏப்ரல் 2008 முதல் 2 ஏப்ரல் 2014[3] வரை.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.rcom.co.in/rcom/StoreLocator/press_release_detail.jsp?id=111}}[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.rcom.co.in/rcom/StoreLocator/press_release_detail.jsp}}[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Rajya Lok Sabha, Member' List". Rajya Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோ._பி._திரிவேதி&oldid=3625939" இலிருந்து மீள்விக்கப்பட்டது